பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவும்,

”நற்செயலற்றிந்தநாமற்றபின்நாதன்

தன்செயல் தானேயென்றுந்தீபற தன்னையே தந்தானென்றுந்தீபற” (திருவுந்தியார் 6)

எனவும் வரும் அருளனுபவமொழிகளால் இனிது விளங்கும்.

“ஆற்றின் வழியேசென்று கடலிற் கலந்து உவர்த் தன்மை பெற்ற நீரானது கடலோதத்தால் மீளவும் ஆற்று நீருடன் கலந்தபொழுது அந்நீரையும், உவர்ப்புச் சுவையுடையதாகச் செய்வது போன்று, சித்தம் சிவமாகப் பெற்ற ஞானிகளது உணர்வு, இறையருட்பெருக்கால் உலகிலேயே மீளவும் கலக்கநேரிட்டால் அக்கலப்பு, பாசப் பிணிப்புடைய மக்களுடைய மனமாயை கன்மங்களையும் நீக்கி நலஞ்செய்யும் ஆற்றலுடையது” என்பர் பெரியோர். இவ்வாறு சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைப்பெற்ற அருட்செல்வர்கள் பால் இறைவன் உடனாய் நின்று அவர்களைக் கொண்டு அருட்செயல் பல நிகழ்த்தியருள்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், மானிக்கவாசகர் ஆகிய சைவ சமயகுரவர் நால்வரும் செய்தருளிய அற்புதங்களைத் திருக்களிற்றுப்படியார் 70, 71, 72, 73 ஆகிய பாடல்களில் விரித்துரைப்பர் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார். சைவ சமய குரவராகிய இவர்கள் இவ்வுலக வாழ்வில் உயிர்கள் படுந்துயரங்களை எண்ணிய நிலையில் நம்ம னோருடைய மும்மலங்களையும் மாற்றும் அருமருந்தாகத் திருவாய்மலர்ந்தருளிய அருளுரைகளே தேவாரம் திருவாசகம் முதலிய அருள் நூல்களாகும்.

சிவஞானச் செல்வர்களாகிய இவர்கள், உலகமக்கள் அனைவரும் இறைவன் திருவருளைப் பெற்று உய்யும்படி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளை அறிவுறுத்தி அந்நெறிகளில் ஒழுகிக் காட்டியுள்ளார்கள். அவற்றுட் சரியையாவது, திருக்கோயில் களில் அலகிடல், மெழுகல், மலர்கொய்து மாலை தொடுத்தல், இறைவனைப் புகழ்ந்து பாடுதல் முதலாக