பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் இதன் திருக்கடைக்காப்புச் செய்யுளால் இனிது புலனாதல் காணலாம்.

இத்திருப்பதிகப் பொருளை அடியொற்றி இறைவனது சொரூப இலக்கணத்தினை யுணர்த்துவது,

“சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடசித்து மல்லன்

பவமுதல் தொழில்களொன்றும் பண்ணிடுவானுமல்லன் தவமுதல் யோகபோகந்தரிப்பவனல்லன்தானே இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா

இயல்பினானே' (சித்தியார் சுபக்கம்-89)

எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும். கறையணி வேலிலர் போலும்’ எனவரும் திருப்பதிகத்திற்கு இது பொருள் என்பதனை மேற்குறித்த சித்தியார் திருவிருத்தத்தின் உரையில் மறைஞானதேசிகர் இத்தேவாரப்பாடலை மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளமையால் நன்குனர GRðľTË f).

அணு முதல் அண்ட முதலாய அனைத்தையும் ஆராய்ந்தறிந்தவர்களே யான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீத்த பெருமக்களாவர். இவர்கள் முத்தி யடைதற்குப் படிமுறையாகக் கொண்டவை முப்பத்தாறு தத்துவங்கள் என்பதும் இவற்றை முத்தியடைதற்குரிய ஏணிப்படியாகக் கொண்டு தத்துவங்கடந்த செம்பொருளாகிய சிவத்தினைக் கண்டு தெளிந்தவர்களே ஈறிலாப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பெற்றவராவர் என்பதும் அறிவுறுத்துவார்,

“சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்

சத்தமுஞ் சத்தமுடிவுந் தம்முள் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்திமுதல் முப்பத்தாறே” (125) "முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்

ஒப்பிலா ஆனந்தத்துள் ளொளிபுக்குச் செப்பவரிய சிவங்கண்டு தான்தெளிந் தப்பரிசாக அமர்ந்திருந் தாரே” (126)

என்றார் திருமூலநாயனார். முப்பத்தாறு தத் துவங்களாவன :