பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


புண்ணிய விசேடத்தால் தனக்கு உயிர்க்குயிராய் இதுகாறும் உள்நின்றுணர்த்தி வந்த பரம் பொருளே இப்பொழுது குரு வடிவமும் கொண்டு எழுந்தருளி வந்து சிவதீக்கை செய்து, “மன்னவகுமாரனாகிய நீ, ஐம்பொறிகளாகிய வேடர் சூழலில் அகப்பட்டு நின் பெருந்தன்மையறியாது மயங்கி இடர்ப் பட்டாய், நின் பெருந்தன்மையான இவ்வியல்பினது என்று அறிவுறுப்ப அங்ங்னம் அறிந்த அளவிலேயே ஐம்பொறிக ளாகிய வேடரை விட்டுநீங்கி வேற்றுமையின்றி இரண்டற ஒன்றுந்தன்மையின் நிலைபெற்று அம்முதல்வன் திருவடி களை அணையும் என்பது,

“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட் டன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” (சிவ. சூ 8)

என வரும் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமாகும். இறைவனேஉயிர்கட்குக் குருவாகி எழுந்தருளி வந்து மெய்யுணர்வளிப்பன் என்னும் உண்மையினை,

ÉÉ

குருவே சிவனெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க்கோனுமாய் நிற்கும் கு.வே யுரையுணர்வற்ற தோர் கோவே' (1581)

எனவரும் திருமந்திரத்தாலும்,

“அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையை”

எனவரும் திருவாசகத்தாலும் நன்குணரலாம்.

இறைவனது பேரானந்தப் பெருஞ்செல்வமுழுதும் தனக்கேயாகக் கொண்டு அநுபவிக்கும் சுதந்திரமுடைய ஆன்மாவை ஆறலைத்துக் கொண்டு சிறுமையுறுத்துதலும் விதி விலக்கை இழப்பித்து இழிதொழிலில் நிற்பித்தலும் பற்றி ஐம்பொறிகளை வேடர்களாக உருவகித்தல் மரபு. கூர் முள்ளுடைய ஐம்பொறிகளாகிய வேடர் சூழலினின்றும் தப்பி உய்திபெற வேண்டுமானால் இறைவனது திருவடி