பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

767


அவற்றுள் யாதிலும் என்னைக் கானப் பெற்றிலேன். இறைவனாகிய நினது திருவருள் எனக்குரியதாகக் கிடைத்தலால் வஞ்சனையைச் செய்யும் அறியாமைப் படலம் கிறித் தூயஞானக் கண்ணின் ஒளிகைவரப்பெற்றபின்னர் நின் அடியவனாகிய யானும் முதல்வனாகிய நினது பெருந்தன்மை யினையும் கண்டேன். கண்டவுடனே காண்பானாகிய என்னையும் கண்டேன் என்னைப்போலும் பிறரையுங் கண்டேன். வியத்தற்குரிய தன்மையென்னே இறைவனாகிய நின்னைக் கண்டு நின்னருள் பெறாதமாந்தர் ஆன்மாவாகிய தம்மையுங்கான இயலாத தன்மையினராவர்” என்பது இத்திருப்பாடல் பொருளாகும்.

இதன்கண், “நின்னைக் கானாமாந்தர் தன்னையுங் காணாத் தன்மையோரே என ஒதியவாற்றான், ஏனைப்பசு பாசங்களும் சிவஞானத்தானன்றி அறியப்படாவென்பது போதரும்” எனவும், ஆன்மா பிறவுயிர்களைத் தனித்த முதலாய்ப் பிரித்தறியுமாறு இல்லையாயினும், சிவத்தைத் தரிசிக்கும் வழித்தான் அதுவாய் நின்று தன்னையறியுமாறு போலப் பிறவுயிர்களையும் அச்சிவத்தின் வண்னமாய்க் கண்டறிதல் அமைவுடைத்தென்பது,

‘என்னையுங்கண்டேன் பிறரையுங்கண்டேன்

நின்னிலையனைத்தையுங் கண்டேன் என்னே நின்னைக் காணாமாந்தர் தன்னையுங் காணாத்தன்மையோரே'

என்பதனாற் புலனாம்” எனவும் சிவஞான முனிவர் இத்திருப்பாடற்பொருளை இனிது விளக்கியுள்ளார்.

மேற்குறித்த திருவெண்காட்டடிகள் பாடலை அடியொற்றியமைந்தது,

"நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ

தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடியரன் தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்கானார் என்னாமென அறிவார் இன்று” (வெ. 54)

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்.