பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

771


தேவார ஆசிரியர் மூவரும் இறைவன் கோயில் கொண்டெழுந்தருளிய திருத்தலங்கள்தோறும் சென்று திருக்கோயில்களைச் சிவனெனவே, வழிபட்ட செய்தி அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருப்பதிகங்களாலும் அவர்களது வரலாறு கூறும் திருத்தொண்டர் புராணத் தாலும் நன்கு தெளியப்படும்.

ն հ

தூய வெண்ணிறுதுதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோலன்பு நீர்பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே”

(பெரிய திருநாவுக், 148)

எனத் திருநாவுக்கரசரது சிவவேடப் பொலிவினைச் சொல்லோவியஞ் செய்துகாட்டிய சேக்கிழாரடிகள், அப்பரது அருள்வேடத்தைக்கண்ட சிவஞானசம்பந்தர் தம் உள்ளக்கிழியிலே உருவெழுதி நெடுங்காலமாக வழிபடப் பெற்றுவந்த அடியார் திருவேடமே இப்பொழுது திருநாவுக்கரசராகப் புறத்தே எழுந்தருளியது என எண்ணித் திருநாவுக்கரசரைத்தொழுது மகிழ்ந்த செய்தியினை,

“சிந்தையிடையறா அன்பும் திருமேனிதனிலசைவும் கந்தைமிகை யாங்கருத்தும் கையுழவாரப்படையும் வந்திழி கண்ணிர் மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத்தரசுமெதிர் வந்தணைய”

'கண்டகவுணியக் கன்றும் கருத்திற்பரவு மெய்க்காதல்

தொண்டர் திருவேடம் நேரேதோன்றிய தென்னத்

தொழுதே' (பெரிய சம்பந்தர். 270, 271)

எனவரும் பாடல்களில் விரித்துக் கூறியுள்ளார். இங்ங்னம் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்ற சிவஞானிகள் அடியார் திருவேடத்தினையும் திருக்கோயிலையும் அரனெனவே கண்டுதொழுத வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சீவன் முத்தராகிய அனைந்தோர் தன்மையினை அறிவுறுத்துவதே சிவஞானபோதத்தில்,