பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எளிதாகக் கிடைக்கும் என அறிவுறுத்துவது,

"கள்ளரோடில்லமுடையார் கலந்திடில்

வெள்ள வெளியாம் என்றுந்தீபற விடும் எளிதாமென்றுந்தீபற” (23)

எனவரும் திருவுந்தியாராகும். இது,

“வெள்ளநீர்ச் சடையினார்தாம் வினவுவார்போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்கு நான்புடைகள்

போந்து கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்துதான் நோக்கிநக்கு வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையினாரே'

(4-75-9)

என வரும் திருநேரிசைப் பொருளையுளங்கொண்டு கூறியதாகும். தோன்றாது நிற்றல் பற்றிக் கள்வர் என்றார். வெள்ளரோம் - வெட்டவெளியில் உள்ளோம். கலத்தல் ஆவது கள்ளராகிய இறைவரோடு இல்லமுடையாராகிய வினைக்குவியலை அப்புறப்படுத்தும் நிலையில் ஒன்றித் தொழில் புரிதல்.

சிவஞானிகள் உலகப் பொருள்களிற் கருத்தைச் செலுத்தாது உயிர்க்குயிராகிய இறைவனையே எக்காலத்துஞ் சார்ந்து நிற்றலின் இறைவனும் இவர்களுடைய வினைப் பயன்களைத் தானே ஒன்று கொள்வனாதலால் இவ்வடியார் களுடைய கருவி கரணங்களெல்லாம் சிவகரனங்களாக அமைய அந்நிலையில் அவர்கள் பெற்ற சிற்றின்பமும் பேரின்பமாக வந்து முடியும்

ć 6 * * - - - - - - -

சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோட்டடமுலை ஆர்ந்தனன்.ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே'

(7-45-4)

எனவரும் நம்பியாரூரர் அருளிச்செயலும்,

‘தென்னாவலு ராளி தேவர்.பிரான் திருவருளால்

மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனும் மெல்லியல்

தன்