பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

785


'நன்மணிநாதம் முழுங்கியென் உள்ளுற நண்ணுவ

தாகாதே’

'வீணைமுரன்றெழும் ஒசையில் இன்பம் மிகுத்திடு

மாகாதே’

'சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பனவாகாதே’

என மணிவாசப் பெருமான் அருளிய திருவாசகத் தொடர்களும்

"துங்கிருள் நடுநல்யாமத்தே

மழலை யாழ்.சிலம்ப வந்தகம் புகுந்தோன்”

எனக் கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாத் தொடரும் அப்பெருமக்களின் சிவயோக அனுபவத்தை நன்கு புலப் படுத்துவனவாகும். திருவாதவூரடிகள் திருச்சிலம்போசை யொலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிட்டுப் பெற்ற பேரின்ப நிலையை விரித்துரைக்கும் நிலையில் அமைந்தது,

“சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே

ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந்தம் பாடிப்பூவல்லி கொய்யாமோ”

எனவரும் திருவாசகமாகும்.

இத்தகைய சிவயோக நெறியில் ஒழுகித் திருச்சிலம் பொலி கேட்டவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர். இச்செய்தி,

"வாசத்திருமஞ்சனம் பள்ளித்தாமம் சாந்தம் மணித்துபம் தேசிற்பெருகுஞ் செழுந்தீபம் முதலாயினவும் திருவழுதும்

ஈசர்க்கேற்ற பரிசினால் அருச்சித்தருள எந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பினொலி

யளித்தார்” (பெரிய கழறிற். 24)

என வரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியால் இனிதுனரப்படும்.

மதுரையிற் குதிரைச் சேவகனாக எழுந்தருளிய

சை, சி. சா. வ. 50