பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உலகு உடல் கரணம் நுகர்பொருள் என்பவற்றை உயிர்களுக்குத் தந்து அவற்றைப் பிறப்பித்தற்கு முன்னரே தனது இச்சையாற்கொண்ட அருளாகிய திருமேனியைக் கொண்டவன் இறைவனாதலின், முதுமைக்கு முதல்வனாக வுள்ளவன் அவனே. பழமையையுடைய நான்மறைகளை அருளிய முதல்வனாகிய அவன் எழுகடல்களையுந் துறைகளாகக் கொண்ட ஏழுலகங்களுக்குத் தலைவ னாயினும் கயிலை மலையின் உச்சியில் விரும்பி வீற்றிருக் கின்றான். தன்னால் தோற்றுவிக்கப்பெற்ற உலகத்தை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பினும் இவ்வுலகங்க ளெல்லாந் தன்னால் தோற்றுவிக்கப்படுதற்கு முன் தான் எல்லாவுயிர்களிடத்தும் கொண்ட நடுவுநிலைமையோடு கூடிய திருவருளாகிய தொன்மை இயல்பினின்றும் சிறிதும் வழுவாது யாண்டும் எல்லாவுயிர்களின் அகத்தும் ஒப்ப வீற்றிருந்து அருள்புரிதலால் இறைவன் என்னும் காரணப் பெயரையுடையவன். தன்வயத்தனாதல் முதலிய எண்குணங் களைத் தனக்கேயுரிமையாகக் கொண்டமையால் எல்லார்க்கும் நல்லருள் சுரக்கும் ஈசனாகத் திகழ்பவன். தன்னை இடைவிடாது நினைந்து போற்றும் மெய்யடியா ருள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவன். நஞ்சுடைய பாம்பினையும் அணிகலனாக அணிந்துள்ளவன். இவ்வாறு காலம் இடம் பொருள் ஆகிய எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு விளங்கும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை இவ்வரம்புகட்கு உட்பட்டு வழங்குஞ் சொற்களால் சொல்லிப் போற்றுதல் நம்மனோர்க்கு இயலாது என்பது,

“ഗ്രങ്ങpഖഞങ്ങ மூப்புக்கு நான்மறைக்கும் முதலேழ்கடற்குந்

துறைவனைச் சூழ்கயிலாயச் சிலம்பனைத் தொன்மை

குன்றா இறைவனை எண்குணத்தீசனையேத்தினர் சித்தந்தம்பால் உறைவனைப் பாம்பனையாம் பின்னையென்சொல்லி

யோதுவதே" (பொன்வண்ணத் 53)

எனவரும் பொன்வண்ணத்தந்தாதியாற் புலனாம். சேரமான் பெருமாள் நாயனார் சொலற்கரிய சூழலாய் விளங்கும்