பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வாழ்க்கையின் அமைப்பினை மூன்றன் பகுதி' எனத் தொகுத்துரைப்பர் தொல்காப்பியர். உலகப் பொதுமறை யாசிரியராகிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த முறையே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால்களாகத் திருக்குறளை வகுத்தருளிச் செய்தமை இங்கு ஒப்பு நோக்கற்பாலதாகும்.

இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் தமிழ்மக்களது குடும்ப வாழ்க்கையினையும் சமுதாய வாழ்க்கையினையும் புலப்படுத்தும் வாழ்க்கை நூலாகவும் திகழ்கின்றது. தொல்காப்பியனார் காலத்து வாழ்ந்த தமிழ் முன்னோர் தம் வாழ்க்கையிற் கண்டுனர்ந்து கடைப் பிடித்தொழுகிய தத்துவவுண்மைகளும் செயல்முறைகளும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பிறப்பிற் குரியனவாகிய இம்மைச் செல்வமும், வரும் பிறப்புக்களிலும் தொடர்ந்து துணைபுரிவனவாகிய அறச்செயல்களும் பிறப்பறமுயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் மக்கள் வாழ்க்கையின் கூறுகள் என முன்னைத் தமிழ்ச் சான்றோர் ஆராய்ந்து வெளியிட்டுள் ளார்கள். அன்பிற் சிறந்த கனவனும் மனைவியுமாக வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்துச் சுற்றத்தாரைப்பேனி விருந்தோம்பி எல்லோர்க்கும் ஆதரவாக வாழ்வதே இம்மை வாழ்வாகும். இவ்வாறு கணவனும் மனைவியுமாக இல்லின்கண் இருந்து மனையறம் நிகழ்த்தினோர் தாம் நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் நுகர்ந்து மனநிறைவுடையராய் முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயல்பு. இங்ங்னம் ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத்தீர்தலாகிய இத்துய ஒழுகலாற்றினைக் காமம் நீத்த பால்’ என வாகைத்தினைக்குரிய துறைகளுள் ஒன்றாக வைத்துரைப்பர் தொல்காப்பியர். “காமம் நீத்த பால்’ என்றது, உரன் என்னும் அங்குசத்தால் ஐம்புலக்களிறுகளை வென்றடக்கிய வீரத்தினைப் புலப்படுத்தும் வெற்றிச் செயலாதலின் வாகைத் தினைக்குரிய துறைகளுள் எண்ணப்பெறுவதாயிற்று. இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையாதன எனத் தெளிந்து எல்லா