பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

87


யுரியனவாக முன்னைத் தமிழ்ச் சான்றோரால் வரையறுக்கப் பட்ட அகத்திணை புறத்தினை யொழுகலாறுகளாகிய வாழ்க்கை நெறி முறைகளை வரம்பாகக் கொண்டு பாடப்பெற்ற சங்கப் பனுவல்களிலே பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலிற் காணப்படும், உள்ளத்துணர்வு மொழித்திட்பம் செயற்றிறம் என்பனவும் இவற்றின் பயனாக அவர்களது உள்ளத்திலே தோன்றி நிலைபெற்ற உலகு, உயிர் பற்றிய எண்ணங்களும் நம்பிக்கை களும் அவற்றின் பயனாக அவர்களது உள்ளத்திற் குடிகொண்ட கடவுட் கொள்கையும் அன்னோர் மேற் கொண்ட தெய்வ வழிபாட்டு நெறி முறைகளும் தத்துவக் கோட்பாடுகளும் ஆகிய இவை அகமும் புறமுமாகிய அவர்தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் பிரிவின்றிக் கலந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களிற் கூறப்படும் பண்டைத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் பொதுவாக இடம்பெற்றுள்ள பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் அவற்றுட் சிறப்பாகத் திகழும் சிவ வழிபாட்டினையும் சிவநெறி பற்றிய மெய்யுணர்வுக் கோட்பாடுகளாகிய சைவ சமயத்துத் தத்துவ வுண்மை களையும் ஒருங்கே தொகுத்து ஆராய்தல் இன்றியமையாத தாகும்.

ஓரறிவுடைய புல் முதலாக ஆறறிவு படைத்த மக்களிறாக இவ்வுலகிற் காணப்படும் மன்னுயிர்த் தொகுதிகளில் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறியுணர்வுடன் ஆறாவதாகிய மனவுணவர்வும் ஒருங்குபெற்றுக் கல்வியறிவொழுக்கங்களால் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ச்சி பெறுதற்குரிய விழைவு அறிவு செயல் என்னும் மூவகையாற்றலும் மக்கட்குலத்தார்க்கேயுரிய சிறப்பியல்புகளாக அமைந்துள்ளன. எனவே உணர் வொழுக்கங்களால் உயர்ச்சி பெறுதற்குரிய மனவுணர்வுடைய மக்கட்குலத்தாரை உயர்திணை யெனவும் அவ்வுணர்வு வாய்க்கப் பெறாத விலங்கு முதலிய உயிர்த் தொகுதிகளையும் உயிரல் பொருளாகிய உலகப் பொருள்களையும் அஃறிணையெனவும் இருதிறமாகப் பகுத்துரைத்தனர். பண்டைத் தமிழ்ச்சான்றோர். பொருள் வகை பற்றிய