பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது 30 பேர் வரை இருந்தோம். நம் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குப் பின் செல்லும் இலக்கியங்களைப் பெற்ற மக்களிருந்தனர், சான்றாக அர்மீனியர்கள், ஜார்ஜியர்கள், அப்போதுதான் இலக்கியங்களை உருவாக்கி வந்த மற்றவர்களும் இருந்தனர். இன்னும் புரட்சியின் பயனாக எழுத்து மொழி யையும் வாய்ப்பையும் பெற்ற மற்றவர் இருந்தனர். இவ் வாய்ப்பைச் சொல்வண்ணம் தீட்ட’ என்றே கோர்க்கி அடிக்கடி குறிப்பிடுவார்.

இத்தகைய தனிக் கூறுபாடுகள் எல்லா இலக்கியங்களையும் ஒரே முறை அணுகுவதனை இயலாததாகி விட்டதனை நாங்கள் உணர்ந்தோம்.

அதனால், எழுத்தாளர் பேராயம் தொடங்குவதற்குச் சற்று முன்னர், இலக்கியக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களை நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்புவதன் வாயிலாக அவர்கள் உடன்பிறப்புக் குடியரசுகளின் எழுத்தாளர்களுடன் பழகி நட்புகொள்ளச் செய்ய முடிவு செய்யப்பட்டது. இக் குழுக்கள் சோவியத்துப் பன்னாட்டு இலக்கியம் அதன் காலில் ஊன்றி நிற்கப் பெரும் பங்காற்றியுள்ளன. ஆங்காங்கே இருந்த எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்கள் ஆராய்ந்ததுடன் அவர்களே புதுப்பாவலர்களையும் எழுத்தாளர்களையும் துழாவி னார்கள். எடுத்துக்காட்டாக, விளாடிமிர் லியூகோவஸ்கியும் பியோட்டிர் பாவ்லோங்கோவும் நானும் தாகிஸ்தானுக்குப் பயணமானபோது நாங்கள் ஒவ்வோரிடத்திலும் கேட்டது : “இங்கே யாராவது கவிஞர்கள் இருக்கிறார்களா?’ என்பதே. சில வேளைகளில் நாங்கள் பெற்ற பதில், இங்கே நாங்கள் எல்லோரும் கவிஞர்கள் தாம். நாங்கள் மெய்யாகவே கவிஞர்களைக் கண்டோம். நான் கண்டுபிடித்தவர்கள்தாம் எத்தன்மையர்! குறிஞ்சிநிலப் பாடி ஒன்றில் நாங்கள் சுலைமன் ஸ்டால்ஸ்கியைக் கண்டுபிடித்தோம். அங்கிருந்த மக்கள் இங்கே கா ட் டு வேளாண்மைக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் நிலத்திலும் சொற்களிலும் வேளாண்மை செய்கிறார்; அவர் கல்வி இல்லாதவர். ஆனால், அவர் மகன் அவரது கவிதைகளை ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதுகிறான்’ என்று சொன்னார்கள். நாங்கள் மலையூருக்குச் சென்றோம். அங்கே எங்கள் முன் ஒர் அறிஞனை, ஒரு விந்தையான கவிஞனைக் கண்டோம். விரைவில் அவன் புகழ் நாடு முழுவதும் பரவியது. எழுத்தாளர் பேராயத்தில் மாக்சீம் கோர்க்கி சுலைம்ன் ஸ்டால்ஸ்கியை இருபதாம் நூற்றாண்டின் ஒமர் என அழைத்தார்.