பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

அலிம் கேஷக்கோவ் கபார்டினோ

பல்காரியா, (19. 1914) உருசியக் கூட்டரசு

மாலைப் பாடல்

சாய்ந்த நிழல்கள் மேலும் இருண்டு துரங்கவே தவிக்கும் குன்றில் பாதையில் கோடாய்ச் சென்றன. வாய்த்த செவ்வான் சிப்பி, உடுக்களின் மெல்லிய அலகால் பிளக்கப் பன்னிற மணிகள் வழங்குமே.

பகலவன் மறையும் காட்சி மேன்மை விருந்தடா ......... பார்,பார்......... தொல்நரைக் குன்றுகள் பத்தும் வட்டமாய் அகல்வான் அரங்கில் மணிச்செம் மதுவழிந் தோடிடும் அழகிய மதுக்கிண் ணத்தினைச் சுற்றி அருந்துமே.

மெல்லென அம்மது தாழ்ந்து தாடியில் வழிந்ததே மேவும் தாடையில் சிவப்புச் சாயம் பூசுமே! வல்விசும்பு இறங்கி வருதல்போல் நெருங்கித் தோன்றிடக் கல்லெழுந் தோங்கும் காகசு மலையினும் படிந்ததே!

என்றும் அழியாக் காலம், பகலொளி போலவே, இருந்திடும் காற்றின் பூடக் இசையும், அஃதொரு செந்நிற மதுவின் கிண்ணமும் என்றும் இறங்குமே. செறிந்தும் சாய்ந்தும் வீழ்ந்திடும் நிழல்களும் அன்னவே.

90