பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

செய்வதில்லை. நான் என் மக்களைக் குணப்படுத்துவதில்லை. நான் மலைகளுக்கு மருத்துவம் செய்கிறேன், அவற்றுக்கு கான் கிரீட்டால் ஊசி போடுகிறேன், நான் பாறைகளை வெட்டி அகற்றுகிறேன். நான் நலிவுற்ற செங்குத்தான பாறைகளுக்கு மருத்துவம் செய்கிறேன். நான் மலையில் சீறிவரும் நீரோட்டங் களின் மடமைக்கு மலைகள், மக்கள் ஆகிய இருவர் நன்மைக் காகவும் அணைகள் கட்டி மருத்துவம் செய்கிறேன்' என்று கூறினார். முழுக்கப் பரிச் வியப்பா.. போல அவர் ஒருவரையொருவர் முழுக்க முழுக்கப் புரிந்துகொண்ட இரு கவிஞர்கள் போல அவர்கள் பேசினார்கள். இவையெல்லாம் வியப்பளிப்பன; விந்தையாவை. நாங்கள் இப் பயணங்களின் போது பல பயனுள்ள ஆர்வமூட்டும் இலக்கியத் தொடர்புகளைப் பெற்றோம். பின், முதல் எழுத்தாளர் பேராயக் கூட்டம் நிகழ்ந்தபோது மாக்சீம் கோர்க்கி அறிவிப்பை மிக்க கவனத் துடன் செவிமடுத்தோம். நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டுவது இன்றியமையாதது எனக் கருதுகின்றேன்- சோவியத் இலக்கியம் உருசிய மொழியிலே இருக்கும் இலக்கியம் மட்டுமன்று. . பேராயத்துக்குப் பிறகு படைப்பாக்கத் தொடர்புகள் பெருகத் தொடங்கின. அனைத்துச் சோவியத்து எழுத்தாளர் கள் ஒன்றியம் அமைக்கப்பட்டது. மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்க ஆர்வம் செலுத்தப்பட்டது. பல குடியரசுகளி லிருந்த எழுத்தாளர்கள் தங்கள் தாய்மொழிகளில் எழுதி னார்கள்; மிகச்சிறப்புற எழுதினார்கள். அவை அதுவரை மொழி பெயர்க்கப்படவில்லை. இந்த வேளையில் நாங்கள் தீவிரமாக ஈடுபட வேண்டிய நிலையில் இருந்தோம். அவர்கள் குறிப்பிடுவது போலப் போரிஸ் பாஸ்டர்நாக்கும் நானும் ஜார்ஜியன் கவிஞர் களை மொழிபெயர்க்கத் தொடங்கினோம். விரைவில் எங்கள் கூட்டு மொழிபெயர்ப்பின் முதல் தொகுதி வெளிவந்தது. அது ‘ஜார்ஜியன் கவிஞர்கள்' என மகுடமிடப்பெற்று திலிசியில் பதிப்பிக்கப்பட்டது. அவ்வாண்டுக்காலங்களிலே மொழிபெயர்ப்பு நம் நாட்டில் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு மிகுந்திருந்தது. நாம் எவ்வளவு இலக்கியச் செல்வம் பெற்றிருந்தோம் என்பது ஒவ்வொருவருக்கும் தெளிவாகப் புலப்பட்டது. அது மிகமிகப் பதற்றமான காலம். போர் முகில் மூட்டங்கள் ஐரோப்பாவைச் சூழ்ந்து வந்தன. மெய்யாகவே பாசிஸத்தின் xii