பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடவியதன் பசுமையிலும் பலவகைகள் உண்டே அடர்வண்ணம் வெளிர்வண்ணம் அழகுபல வாகும். படிந்துமலைப் பாறையிலும் சரிவினிலும் மின்னும் பனிப்படல வெண்மையிலும் பலசாயல் காண்பாய்.

ஒவ்வொன்றும் அதற்குரிய நோக்கம் நிறை வேற்றும், ஒவ்வொன்றும் உரியசுமை தான்சுமந்து செல்லும் : இவ்வினிய உலகத்தில் கல்லுக்கு நிகராய் எங்கேனும் மரக்கட்டை இருப்பதுண்டோ? கூறாய்.

தமக்கென்று துயரங்கள் உயிர்க்கெல்லாம் உண்டு, தமக்குரிய தொலைவுதனைப் பறவைகளே கடக்கும். எனினும்இங்குக் கடல் உள்ள காரணத்தால் காட்டின் எழில்ஓடை வறளத்தான் வேண்டும்எனல் முறையோ?

எருதுகளின் குளம்புகளும் கொம்புகளும் ஒன்றாய் இருப்பதிந்த உலகத்தில் எங்கேனும் உண்டோ? அருமைமிகு காதலியே! நின்நிறை குறைகள் அடியேன்பால் தேடுவதை விட்டொழிப்பாய் நீயே.

I 07