பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்குள் நானும் எங்கோ நெடுந்தொலை ஒடி யிருக்க வேண்டும்; இருப்பினும் போகிறேன், போகிறேன்; போயாக வேண்டுமே. எங்கே இறப்பும் ஒருவனை ஒருமுறை தன்கையி லிருந்து தப்பவைத் ததுவோ அங்கே நான்போய் அடைந்திட வேண்டும். அங்கே, அவ் வேளையில் துமுக்கியின் ஒலியினைத் தொடர்ந்துநான் கேட்கையில், தளித்த உளத்தொடும் புழுதியில் சுருண்டும் நீட்டியும் படுப்பேன். பெயர்இல் லாதவர் பெயர்தெரி யாதவர் தம்மைஎல் லாம் தான் முந்திடு வேனே.

மகிழ்வுக்கு ஏது நினைவு? நீங்கள் அதனைக் காண முடியாது! நிகழ்ந்த பல்லாண்டாய் நேற்றுங் கூடச் சரிபார்த் தேன்.அதை. நுண்ணிய துயரும்தன் வடுவினைப் பதிக்கும், ஆனால் மகிழ்ச்சிக்கு ஏது நினைவு? ஓ, இல்லை. காற்றைப் போன்றது அறிவோம், நுகர்வோம். கதிர்ஒளி போலும், காற்றினைப் போலும் இயற்கை யானது மகிழ்வு. எனவே, அதன்நினைவு அதனொடு மறையும்: இன்னலுக் கென்றும் முன்வரு கில்லோம். மகிழ்வில் நீ இருப்பின் சொற்கள் வேண்டா. நெஞ்சினில் உள்ள நெஞ்சாங் குலை.அது; துன்பம் அதனைத் துளைத்தால் அன்றி என்என அதனை எண்ணுவது இல்லை.

1 s 6