பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய வாங்கா மூண்டனன் வெறியினால் ‘முடிந்த கதைஇது விட்டிடு இளைஞனே, முதியவர் தம்மை மதிப்பதுஇப் படியா? முழுதும் விசைப்படகு யாவர்க்கும் உரிமையே!” கொதித்துக் கிழவன் கூறக் கேட்டதும் கொண்ட பையில் நான் கையினால் துழாவியே “இதனைக் கொள்கநீ சினப்பதில் பொருளிலை இப்பழம் புகைக்குழல் உன்னதே பெற்றிடு,

என்று கொடுத்ததும் புகைக்கூண்டு போலே இனிது புகைத்தனன் வன்கோ அமைதியாய். ‘நன்றி கூறினேன்; ஒன்றுகேள், என்சினம் நாடு குழற்குஅன்று கொள்கைக் காகவே! நன்றிலாப் பொழுது நமக்கு நேர்கையில் நடத்தஓர் படகும் வாய்ப்பது இல்லையே: இன்றெ னக்கொரு பதற்ற வேளையில் ஈவரே விசைப்படகு, என்று இயம்பினான்.

154