பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ராமிஸ் ரிஸ்குலோவ் கிர்கீசியா

(S. 1934)

மக்கள்

அனைத்து மக்களின் கண்ணிர் அனைத்தும் இணைந்துபாய்ந் தோடினால் குன்றையும் ஆற்றையும் உப்பாய் மாற்றிடும்; பள்ளத் தாக்கெலாம் உப்பளம் ஆகிடும். மலர்களின் மணமும் கைத்துப் போகுமே!

அனைத்து மக்களின் புன்னகை அனைத்தும் மலர்ந்தொன் றானால், அனைத்து மகிழ்ச்சியும் சால்பும் இணைந்தொன் றானால், மண்ணில் புதியதோர் செஞ்சுடர் எழுந்திடும். வன்கொடுங் கோலர்கள் பொறாமையால் மடிவரே.

மக்கள்! காலங் காலமாய் ஞாலம் அளந்த மாபெரும் நாடோடி மக்கள். நாட்டுக் கதைதரும் பூத விலங்குபோல் வலிய தாயினும் அன்பு பூண்ட பூத விலங்கிது, ஈறிலாக் காலமாய் நீளு கின்றது,

I66