பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் நம் வாழ்வில் எத்தனை பெண்டிரோ இனியராய் நம்மை உள்ளன் போடு காதலித் திருப்பர்; அத்தகு மகளிரை அறியாது போயினோம். இனியேனும் அன்னார் எங்கிருக் கின்றனர் என்பதை அருள்கூர்ந்து எமக்குக் காட்டுக! இன்னும், உண்மையாய்ப் பார்த்தால், உலகில் நமக்குப் பெயரில் லாமலே பிறந்த குழந்தைகள் எத்தனை எத்தனை யோயார் கண்டார்? மொத்தக் கணக்கை மொழியவேண் டுவனே.

நல்ல மாலைப் பொழுது

ஞாயிறு போய்மறையும்-ஒளி-நாளின் பகல்குறையும் தாய்மலை அத்தனையும்-நிழல்-குழந்தை களைத்தருமே. சேய்கள் படிப்படியாய்-வளர்ந்து-பெற்ற தாய்தனையே து.ாய்இருள் கல்லறையில்-கொண்டு-தூர்த்தே புதைத்திடுமே.

பாய்ந்தெழும் சூறாவளி-நின்று-வானிடை மேல்எழும்பும் தாய்கன்னி வான்ஏற்றம்-உண்மை-தானென்று

(சான்றுரைக்கும். தேய்குளிர் வானத்திலே-பறவைத்-தோற்றத்தி லேதிரண்ட ஆயதோர் ஊனுருவம்-மெல்ல-அழகுறச் சிறகடிக்கும்.

பள்ளத்தாக் கின்இடையில்-பெண்-பாவை ஒருத்திநிற்பாள் உள்ளவள் காலடியில்-உலகின்-அச்சுச் சுழல்கிறது. தோன்றா அவ்அச்சின்-வெளித்-தோன்றும் ஒருகூறாய் அன்புஇவ் உலகியக்கும்-எழில்-அணங்கவள் நிற்கின்றாள்.

குற்றம் நடந்தஇடம்-தனில் நான்-மாட்டிக் கொள்ளவில்லை குற்றத்தைக் கண்டுரைக்க-யாரும்-சான்றிலர்; ஆனாலும் குற்றம் புரிந்தவன்நான்-என்-குற்றம் உணருகின்றேன் வெட்கமாய் நடுக்கமுடன்-இந்த-மெல்லியை

(விடுத்துரைப்பேன்: மற்றவள் எனக்குரியாள்-அவட்கு-மாலை வணக்கம்.அடி ஒற்றைத் தனிமயிலே.........

175