பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டாள் என்னை: விண்டது என் உறுதி ஏவி மயக்கும் ஆவல் விழிகளால் சரண்புகுந் தேன்நான்; உரனை இழந்தேன். இன்இள வேனிலின் பொன்கதிர்ச் சுடராய் என்னுள் மகிழ்ச்சியின் மின்னொளி நிறைத்துக் காலங்கள் தம்மைக் கணங்களாய் மாற்றினாள். மெய்யன்பி னாலே கையொடுகை பிணைத்து வாழ்க்கை மதுவினை அடிவரை பருகினோம். நிறைஇன் பத்தால் நிமிர்ந்து மகிழ்ந்தேன். இன்பிலும் துன்பிலும் மழையிலும் வெயிலிலும் என்றன் தோழியும் மனைவியும் அவளே. இங்கனம் நடத்திய இன்ப வாழ்க்கையில் உருசியா அளித்த ஒருபெரும் பரிசாய்ப் பெருமை பூரிக்கப் பிறந்தனள் ஒருமகள்.

விரைவில் ஒருவருக் கொருவர் எங்கள் தாயக மொழிகளில் அளவ ளாவுவோம். அன்னையைப் போல்அவள் நல்லியல் பினளாய், உருசிய அன்னையின் பெருங்குணத் தினளாய், உருசியமும் மான்சியும் மருவி மணக்கும் இருவகைக் குருதி அவள்உடல் பாயுமே. யாவரும் அவளை இருவகை யாகவும் அழைக்க, மற்றும் அறிக அம்மகள் இருமடங் காய்எனக்கு இனியள்என் பதையே.

282