பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீடுமிகும் ஒருசெயலைப் பெருஞ்செயலை நாம்செய்தால் பேருலகில் அன்னைமார் புன்முறுவல் பூத்திடுவர் சிரித்து மகிழ்ச்சியினால் சிந்திடுவர் கண்ணிரை இருப்போரும் என்றோ இறந்தோரும் தாம்.

பொதுமையர்

எங்கள் காலப் புதுமை மக்கள்.யாம்

ஈடி லாப்பொது வுடைமையர் எங்கள் வல்லமைக் கைகள் நல்லுணர்வு

ஆற்றலால் மென்மை கொண்டன;

இங்கெம் கையிலே கடல்கள், குன்றுகள்,

இனிய பள்ளத் தாக்குகள்

தங்கி உள்ளன. படர்ந்த என்னுடைத் தாயகம் நிலைத்து ஓங்குமே.

எஃகு ருக்கிடும் ஆலை மாபெரும்

ஏமு றும்நகர் ஆக்குவோம்;

எஃகின் உறுதியால் அச்சம் அற்றுமே

இங்கு அனைத்தையும் ஆற்றுவோம்:

மிக்க பேரொளிச் செங்க திர்தனை

விழிக்கு நேர்வழி காணு வோம்;

தக்க வண்ணமாய் எந்தப் போதிலும்

சமன்கொ ளும்நிலை பேணுவோம்.

எங்கள் நெஞ்சத் துடிப்பை மாநிலச்

செவிகள் யாவுமே கேட்டிடும்;

எங்கள் நெஞ்சகத் செந்தீ மின்னலை நிலையம் ஓங்கிட முட்டிடும்:

184