பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

யாரஸ்லாவ் ஸ்மெல்யாகோவ் உருசியக் கூட்டரசு (13. 1913)

அழகிய சிறுக்கி லைடா

மணங்கமழும் சரக்கொன்றை மலர்ந்து உவக்கும் மருங்கினிலே வெண்குடில்கள் இணைந்தி ருக்கும் மனங்கவரும் அழகணங்கு லைடா அங்கு வாழ்கின்றாள் தென்பகுதி வீதி தன்னில்!

நீண்டபெரும் பொன்னருவி அவளின் கூந்தல் நெய்யுண்ட தீப்பந்தம் போல மின்னும்; பூண்டகரு நீலவுடை தன்னில் வாசல் பூத்த எழில் பூக்கோலம் பொருந்திப் பாடும்.

சித்திரைமா தத்தைநன் குணர லாகும் தேன்மணக்கும் ஒளிகிளரும் ஞாழல் பூக்கள் இட்டுவைத்த கோலம்போல் அமைதி யாகப் பூந்துகளை எழில்காலைப் பொழுதில் தூவும்.

எதிரொளிக்கும் சாளரத்தில் அவளைக் காண்பீர், ஈடற்ற எழிலணங்கு சிறுக்கி லைடா கதிரொளிபோல் அமைதியுடன் நடந்து செல்வாள் கண்டறிவீர் அவளழகின் இருப்பும் எங்கோ?

190