பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்ஆள் காடுகள், ஏரிகள், விதைப்புக் கான நெடுவயல்கள் வரிசை வரிசை யாகக் கண்முன் வந்து படர்ந்தனவே. நானா வகையில் விழிக்கு விருந்தாய் நல்கும் காட்சிபல ஆனால் எங்கே? எங்கே இந்த ஒடும் அடிவானம்?

ஒடி இவர்ந்து பறந்தே எப்படி உன்னைத் தொடர்ந்தாலும் ஓங்கும் விரைவில் நெருங்க நெருங்க விலகி மறைகின்றாய்; கோடி சூழ்ச்சிகள் விரைவுடன் எத்தனை கொண்டு தொடர்ந்தாலும் கும்மா ளத்தால் என்னை அலைத்துக் கூத்துப் பார்க்கின்றாய்!

அடிவா னேநீ, அடையாளம் ஏதும் இன்றி மறைந்திட்டாய் அடடே உனக்கென்று உண்மை வாழ்க்கை உலகில் இலைபோலும்; முடிவாய் ஒன்று வேட்டையி லிருந்து நற்பொருள் பெற்றிட்டேன், முயற்சி, விடாமை, வன்பொறை இவையே முதன்மை எனக்கொண்டேன். நானும் என்றன் தோழரும் தொலைவில் பரந்த புதிதான மெய்மை சிறந்த தொடுவா னங்களை நாளும் ஆய்கின்றோம், மேனாள் காணா வழிகள் தோன்றின் மீண்டும் எங்களுடை முனைப்பார் வத்தைத் தணிவை இந்த உலகில் காட்டிடுவோம்.

202