பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமை நிலத்திருந்து பிரிக்கப் பட்டோம்...... கல்லைப் பிளந்தெழும் நல்லுாற்றுப் போல, முல்லைக் கொடிஒன்று முளைத்து வருகையில் எல்லை இல்லா இன்பம் கொள்கிறோம். தளையிடும் விலங்குகள், பதுங்கு குழிகள், போரின் பொல்லாச் சுறுநாற் றங்கள் இல்லா இனிய உலகினுக்கு ஏங்கிக் கனவுகள் காண்கிறேன். அந்த உலகில் நரத்த மரங்கள் பூத்துக் குலுங்குக! நல்ஒளிக் கனவுகள் அங்கும் நிரப்புக! பளிச்சிடும் ஒளிமழை படர்விளக் கேற்றுக! மங்கையர் அந்த மண்ணில் ஓங்குக! நீராவி வண்டிகள் நிரல்பட இயங்குக! கொழுங்கனி குலுங்குக! கூலங்கள் நிறைக! மந்திர உலகமாய், ஆமாம், மாந்தர் உழைப்பின் மந்திர உலகமாய் அதுதிக ழட்டும். அதன் உயர் இன்னிசை உரறி முழங்குக! செருக்கொடும் ஓங்குக! மண்ணி னின்று சென்றுஒரு மைந்தன் செவ்வாய்க் கோளில் ஆங்கொரு மூலையில் மகிழ்வுடன் பழுப்பு மண்ணினை அள்ளுவான். அவன்தன் விழிகள் ஆர்வம் ததும்ப நீலப் பச்சைக் கோளினை நோக்கிடும் இதுவா தொலைவு? என்றும் அணிமையே.

சைபீரியன் குறிப்பேட்டிலிருந்து

கிண்ணம் வழிந்திட மதுவை நிரப்புவர்

குடிஅதை! இன்றேல் கெட்டொழிவாய்:

வண்ணக் குழவியர் இரட்டையர் இங்கே காட்சிக் குரிய பொருத்தமதே.

24 3