பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றன் இன்பக் கனவுகளும்

இரவில் நிலையாய்த் தங்கிடுமே.

பொன்றும் புயல்காற் றுடன்காலம்

மென்மேல் விரைந்து போகிறதே.

நிலத்தை, பூங்கா, சோலைகளை,

நிறைந்த ஆற்றை, விண்ணரங்க

நலத்தை யாவும் நோக்குகிறேன்,

எல்லை உண்டோ புடவிக்கே?

இந்தப் புடவிப் படைப்பெல்லாம்

எண்ண எண்ண அற்புதமே,

எந்த வழியி லும்விளக்க

இயலா அரிய புதிராகும்.

உலரும் செம்பூ தனிலிருந்தே

உதிரும் இதழ்கள் ஒவ்வொன்றாய்......

நிலமேல் இறப்பவை புதுப்பிறவி

எடுத்து மீண்டும் திரும்பிடுமே.

எண்ணும் மூளை மிகச்சுருங்கி

இங்கே பொடியாய் உலர்ந்திடுமே;

மண்ணுயிர் இறந்தும் புதுப்புதிதாய் மீண்டும் பிறக்கும் புதிர்என்ன?

மெய்யாய் இயற்கை தனைத்தானே

மீண்டும் படைத்துக் கொள்ளுமடா!

வையம் என்றும் நிலைக்குமடா!

வாழ்வுக்கு அழிவே இல்லையடா!

வாழ்க்கை வளஞ்சார் பெரும்படைப்பின்

வகுத்த ஒருசிறு துகளாகும்.

வாழ்ந்து முடிந்தே அழிபவர்நாம்

எனினும் உலகம் வாழ்ந்திருக்கும் மனிதன் மீண்டும் பிறந்திடுவான்......

24 8