பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தேர் விரையட்டும், தடுத்திடும்ஒர் உரிமைநமக்கு

இல்லை அன்றோ? ஞாலத்தின் புவிஈர்ப்பில் இழுப்புறல்போல் உலகொழுங்கில்

இழுக்கப் பட்டேன்: ஆலித்த என்படைப்பில் வாழ்வருமை நிகழ்வெல்லாம்

நிறைந்தி ருக்கும்; வேலியற்ற இயக்கத்தில் முடிவின்றி அலைந்திடும்என்

வேட்கை உள்ளம்.

பாடல்

அக்கச்சியே, ஆருயிரே உன்னைப்பாடு வேனே-என் அகம்எல்லாம் நிறைந்ததுஉன்றன் அன்புநலந் தானே! அக்கச்சியே, தாயகத்தைப் பாடுகின்றேன் நானே-முகில் அடைவிலாது மலர்ந்தொளிரும் அழகிதுநம் வானே!

பளபளத்து மின்னிஒளிர் பருத்திவயற் காடு-ஆ ! பரிதி.எழும் அடிவானின் எல்லைவரை மேடு; தளதளத்த கொடிமுந்திரி அறுவடையின் போது-நம் தனித்தொளிரும் பருத்திகளைப் பறிப்பதுவே தோது.

திறமையான பரிவுமிகும் இனியகைக ளாலே-ஒளிச் சீர்பருத்திக் கதிர்களினை மலரச்செய்வ தாலே, உறவுமிகும் அக்கச்சியே உன்னைப்பாடு கின்றேன்-உன்

ஒங்குசெழும் விளைவைத்தரும் நிலத்தைப்பாடு கின்றேன்!

கதிர்எழுமுன் நீஎழுந்து கடமைசெயச் செல்வாய்-கீழ்க் கருக்கிருட்டு வைகறையில் விரைந்துதொழில் செய்வாய்! ஒதுங்கிமறை வானரங்கில் உடுக்கள்.ஒவ் வொன்றாய்

உன்னுடைய உழைப்பருமை ஓங்கிடுமே நன்றாய்!

25.3