பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியறைப் பலகைகள்

பிறந்தபொன் நாடே! பள்ளிப் பிள்ளையாய்ப் பலகையில் குந்திய இனியஅந் நாள்களில் எத்தனை நினைவுகள், நெஞ்சில் குவித்தாய். தேசப் படத்தில் கடல்களும் ஆறுமாய்க் காட்சி அளித்தாய். நெடுந்தொலை நாடு களுக்கு எல்லாம் பயணம் செல்வதாய்ப் பற்பல கனவுகள் உளத்துரு வாக்கினாய்.........

பிறந்தபொன் நாடே! முதன்முத லாக முக்கி முனகிநான் எழுத்துக் கூட்டிப் படித்த உருசிய மொழியின் சிறிய தொடரையும், பின்னனை ஊக்கியும், நல்லறிவு ஊட்டியும், விரிபெரு நாட்டுடன் ஒன்றுமாறு இணைத்த பாட்டையும் உரையையும் சுண்ணக் கட்டியால் எழுதுதல் போல எண்ணத் தால்இங்கு எழுதிப் பார்க்கிறேன்.

பிறந்தபொன் நாடே! கழிந்திடும் ஒவ்வோர் ஆண்டும் அறிவிலும் ஆண்டிலும் முதிர்குவோம்; ஆயினும், குழந்தையாய் வகுப்பறைப் பலகையில் குந்தி உணர்ந்தஅப் பழைய உணர்வுகள் இன்றும் புதுமையாய் எழுந்துமே லோங்க நினைந்து நினைந்து நெகிழ்கின் றேனே.