பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரம்ஸ்பாபாசான் உசுபெகிஸ்தான் (1%. 1921)

நாலடிகள்

எளிதில் மலையில் ஏறுபவன் இறங்கல் மிகவும் எளிதாகும்; அளிதே வழுக்கி விழுந்துவிடில் அடிபட்டு அல்லல் உற்றிடுவான். நெளியும் சுமையோடு ஏறுபவன் நெஞ்சில் சுமந்தே ஏறுகிறான்; ஒளிசெய் வானம் மிகஅருகில் உதவி நிற்றல் காண்கின்றார்.

பிறர்க்கு வறளை வருமுன்னர், பெரிதே என்னை அணுகட்டும்; பிறர்க்கு வெள்ளி நரைமுடிகள் வருமுன் எனக்குப் பெருகட்டும்: பிறர்க்கு முன்என் நெற்றியிலே வாழ்க்கை உழுத திரைத்தழும்பு பதிக்கும் எனினும் வரவேற்பேன் பாடிச் சிரித்துப் போரிடுவேன்.

குப்பிக் குள்ளே பேரமைதி குடிகொண் டுள்ள இனியமது தப்பி உன்னுள் சென்றவுடன் தாறு மாறாய்க் குதிப்பதுபார் !

கப்பும் உன்றன் கவலைகளைக் கலைக்கா தேமதுக் -

[குப்பியினால்,

தப்புச் செய்வாய் முட்டாளே, குப்பி யோடு மோதாதே.

பெரிது வளரும் கோதுமைக்குப் பெருமை கொள்க காகசுதான் நெடிதாய் ஒங்கும் பீர்ச்சுமரக் காட்டால் வடக்குப் பீடுறுக.

முடிபுனை வோம்நாம் நாட்டிற்கு முற்றும் பருத்திக்

(கிளைகளினால்

பருத்தி விளைவால், விளைவிப்போன் என்றும் பெருமைப்

(பட்டிடலாம்.

17