பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஜிவோர்க் எமின் அர்மீனியா

(பி. 1919)

இயன்றவர் என்னிடம் இயம்புக; மாந்தனைக் காட்டிலும் வன்மை குன்றியும் வன்மை மிகுந்தும் இருப்பவர் யாரோ? மண்ணின் எல்லையைத் தாண்டினோன் மாந்தன். வீறுடை அணுவினைக் கூறுகள் செய்தவன். ஆயினும், சருகுபோல் நெஞ்சினைப் பெற்றுளான். ஒளிபுறம் தோன்ற ஒடுசெங் குருதி குதிக்கும் நல்ல குருதிக் குழலொடு பாண்டங்கள் அனைத்தினும் நொய்மைப் பாண்டமாய் இன்றுவாழ்ந் திங்கு இருக்கின் றானே. மலைகளை எல்லாம் தகர்க்கும் மாந்தனை சிறியதோர் குண்டோ, சினச்சொலோ, கொடியதோர் ஏளன உரையோ இவற்றுள் ஒன்று.அவன் நெஞ்சாங் குலையின் துடிப்பினை நிறுத்துமே! மாந்தன்மா மாயன், தந்திரஞ் செய்வதில் பெரும்புள்ளிக் காரன், அப்புள்ளிக் காரன் பல்லிக்குக் கூட நிகராக மாட்டான். (பல்லியின் வாலைத் துண்டித்துப் பாருங்கள்

5g