பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கல்மேல் செங்கலாய் அடுக்கி வானளா விகளை இங்கமைக் கின்றேன். புதுமனை புகுந்திடும் நீவிர் அதன்தரைச் செங்கல் ஒவ்வொன் றிற்கும் அதில்உள பலகை ஒன்வொன் றிற்கும் எனக்கு நன்றியை இயம்பிட வேண்டும். கூரிய முள்ளுடைக் குதிகால் செருப்பால் பலகைத் தளத்தைப் பாழாக் காதீர் - அவை என் விரல்கள்! விரல்கள் மிதிபட விரும்புமா?..... ஒ,ஒ! கால னிகளைக் கழற்றி எறிந்தபின் கோல இருக்கையில் குந்துக. மேலும், இதையும் தெரிந்து கொள்வீர்: அங்குள சாளரம் அனைத்தும் எதிர்காலத் தை நான் ஏறிட்டு நோக்கிடும் என்றன் கண்கள்! இன்னும் நீங்கள் குளிரக் குளிரக் குளிக்கின் lர்களே! அந்த நீரை மாடியில் ஏற்றிக் குழாயின் வழியாய்க் கொணர்ந்தவன் நானே! தோட்டத்து மரமும் துாமலர்ப் பாத்தியும் நான்உமக் களித்த பரிசுகள் அலவோ?

நான்ஒர் உழைப்பாளி, உழைப்பால் என்றும் சாகாத் தன்மையன்காரைத் தூணிலும், சலவைக் கல்லிலும், பளிங்கிலும், தகட்டிலும், வாழ்கிறேன். ஆர்வத் துடன்நான் அயராது உழைக்கிறேன். புரைஒன்று கண்டால் பொறுமை இழக்கிறேன். எனது நாடு இதனில்யான் இயற்று வனவே சட்டங்கள் ஆகும். என்றன் கால்களை இந்த மண்ணில் ஊன்றிடும் வேர்போல் ஊன்றியுள் ளேன்நான். எனினும் நான் நிலத்தொடு பிணிக்கப் பட்டவன் அல்லேன்,

6 I