பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாட்டின் பண்பாடு, அவ்வளவு சிறந்த சமூக நிலை மாற்றங்களைத் தோற்றுவித்தது; ஏதுமில்லாமையின்மீது எழுப்பப்பட்டதன்று. அவ் வேளையில் தோன்றிய இளம் சோவியத்து எழுத்தாளர்கள் பின்னணியிலே சோவியத்து இலக்கியம் நின்றது. அவர்களது மரபுகளைச் சார்வது தேவையாகவும் சாதனையாகவும் இருந்தன. சோவியத்து ஆற்றலின் தோற்ற நாள்களிலிருந்தே அதன் முதன்மைக் குரல் பன்னாட்டுக் குழுவினரிடையதாய், மெய்யாகவே உருசிய இலக்கியத்தினுடையதாய் அமைந்திருந்தது. ஆனால், அப்போதுங்கூட உடன் இணை வாகவே உருசிய எழுத்தாளர்களின் பெயர்கள் அங்கே உயர்திற *--ன்பிறப்பு இலக்கியங்கள் இயற்றியோர் போலவே ஒலித்தன. முன்னரே புகழ்பெற்ற டாரஸ் ஹெவ்சென்கோ தவிர, ஐவான் பிரான்கோ, மிக்காயில், கோட்சியின்ஸ்கி, இலியா சோவாட்ஸி, ஆகாகி செரட்ஸ்லி, கச்சாட்டுர் அபோவியன், ஒவனிஸ் தும்மானியன், கேப்டுல்லா துக்காய் போன்ற முன்னணி எழுத்தாளர்கள் இருந்தனர்.

உருசிய மக்களல்லாதவர்களின் உடன்பிறப்பு இலக்கியங்கள் வளர்ச்சியின் பல்வேறு நிலையில் இருந்தனவேனும், உக்ரேனிய இளம் எழுத்தாளர்கள் வளர்ச்சியில் மிக்காயில் கோட்சியூ பின்ஸ்கி அல்லது ஜவான் பிரான்கோ ஆகியோரின் வலிய செல்வாக்கு புரட்சிக்குமுன் ஏற்படுத்தியிருந்தது; முன்னோடி யாகத் திகழ்ந்தது. சோவியத்து ஆற்றல் நிலைபெறுத்தப்பட்ட உடன் பின்தொடர்ந்த ஆண்டுகளில் தாஜிக், உஸ்பெக் இலக்கியங் களின்மீது சாட்டிரின் அயினியின் செல்வாக்குப் புலப்பட்டது. புரட்சிகர லாட்வியன் இலக்கியத்தில் ஜேனிஸ் ஒயினிஸ், ஆண்ட்ரெஜ் ஆகியோர் வயத்திறத்தினை ஒருவர் காணலாம்: அப்காசியா டிமிட்ரி குலியாவில் உரைநடை எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாளர், இலக்கிய அறிஞர் ஆன சிரில் மற்றும் மைத்தோடியஸ் ஒன்றிக் கலந்துவிட்டதைக் காணலாம். ஏனெனில், அப்காசியா எழுத்துகளை உருவாக்கியவரும் அதிலே முதல் கவிதைகள், உரைநடைகள், நாடகங்கள் ஆகியவற்றை இயற்றியவரும் அவரே ஆவார்.

உடன்பிறப்பு இலக்கியங்கள். எப்படி இவ்வாறு முகிழ்த்தன? அது நீண்ட வழிமுறை கொண்டது. அருகே ஒன்றாக வரவேண்டுமென்ற விழைவு மிக முறுகிக் கவர்ந்தது. இச் சீரிய இன்றியமையாத காரணத்திற்கு மிக்குயர் பங்காற்றிய மாக்சிம் கோர்க்கியைப்பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். பல ஆண்டுகள் மாக்சீம் கோர்க்கி பல்வகை இலக்கியங்களையும் நெருக்கமாக

viii