பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

நிக்கொலாய் கிரிபெச்சோவ் உருசியக் கூட்டரசு

(19. 1910)

நம் உலகம்

புன்மொழிகள் பலதுாற்றிக் குருட்டுஆந்தை போலப் பொய்மைக்குக் கண்ணவிந்த புல்லியர்க்குஇஃது உரைப்பேன்: எம்உலகை அவ்வுலகின் எழில்வளத்தைச் சிறப்பை யார்துணையும் இல்லாமல் படைத்தவர்கள் நாங்கள்.

உங்களுடை மயக்குரைகள், வசைஉளறல் தாமும், உம்பொல்லா முடிபுகளும் எவரையும்ஏ மாற்றா. எங்களுடைக் கைகள் இவை இயற்றியவை காணிர்! இரும்பொறிகள், கட்டடங்கள், நூல்கள்என நிற்கும்.

அனைத்துலகும் காணஇது மிகத்தெளிந்த உண்மை அளவில்வழி இவ்வுலகை மாற்றஉத வினோம்.யாம்; முனைப்புற்ற எம்கதையைச் சொல்லாமல் நில்லோம்; முயற்சி, கடும் உழைப்பீந்த மதிப்பினையும் சொல்வோம்.

நடுங்குகுளிர், நோய், வறுமை; தொழிற்சாலை நோக்கி நடப்பதற்கும் வலிவில்லை தொழிலாளர் கட்கே, அடுத்தடுத்துப் பலவாரம் உணவொடுசா றில்லை, அவர்மனைக்குப் பலமாதம் பால்கூட இல்லை.

67