பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கார்லோ காலாட்ஜே ஜியார்சியா

(1%. 1907)

ஜியார்சியன் மொழி

கடிதான சொற்களினால் செய்த அப்பம்

கருத்துறும் வாழ்வப்பம், சியார்சிப் பேச்சாம்

எடுத்ததனைப் பகிர்ந்துண்போம், வாரீர் நண்பீர்! எத்தனை முறைஎனினும் உண்ண லாமே.

திணறவைக்கும் அடிக்களத்தில் கோது மையைத் தேவையிலா உமிநீக்கிப் பெறுவ தற்குத்

தணல்வியர்வை பொழிந்து, தடி ஒச்சு தற்கே

வாழ்நாளில் பாதியினைக் கழித்தி ருப்பேன்.

கோதுமையை விளைப்போனின் உருவ கத்தால்

கொண்டஇந்த மொழிவிளக்கத் துணிந்து விட்டேன்: ஏர்உழுது சொல்விளைத்தல், நோய்வா ராமல்

இறைவேண்டும் எனமுயற்சி யாவும் பாரீர்.

எழும்என்றன் உணர்ச்சிஎலாம் விண்ணை நோக்கி ஏற்றமழை, காலநிலை வேண்டி நிற்கும்: செழித்தெழும்பும் கோதுமையின் கதிர்கள் யாவும்

சீர்சிறந்து கருகாமல் முதிரக் கூடும்.

69