பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சில்வ கபுத்திக்கியான் அர்மீனியா

(ta. 1919)

வரவேற்பு

சனிக்கிழமை என்றாலே எனக்குமிக மகிழ்ச்சி, சரியாக விடியுமுன்னே என்றன்மரு மக்கள், இனிக்குமுகத் தோடாடிக் குதித்துவரு வார்கள், எச்சரிக்கை இல்லாமல் உள்நுழைந்து விடுவார்.

வேலையில்லை ஒய்வும்இல்லை ஒரேஅமளி! ‘பயல்காள்! வீடெல்லாம் போச்சு’ என்று திட்டிடுவார் என்தாய்; சாலைமண்ணில் பாதியினை அவர்கள் குதி கால்கள் தரையெல்லாம் நிரப்பிவிடும்! சொல்லிஎன்ன நடக்கும்?

சிரிக்கின்றார்! என்செய்வோம்! ஆண்டவற்கே வெளிச்சம்! சில்வென்று நாட்டுப்புற மணம்அவர்பால் வீசும், அடிக்கின்றார் பாட்டியவள் பெட்டியினைக் கொள்ளை! அரியதொலை பேசியினைத் திருகி.மகிழ் வாரே!

இப்படிஇ ருந்தவர்கள் இருமாத மாக இறைவன்தன் துTதுவர்போல் ஆகிவிடக் கண்டேன். இப்பொழுதெல் லாம்அவர்கள் உள்நுழைந்த உடனே இசைப்பேழை முன்னேபோய் இருந்துகொள்கின் றாரே!

74