பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3CO செளந்தர கோகிலம் عة. உற்றுநோக்கித் தமது மனைவி கூறியது உண்மைதான் என்பதை நிச்சயித்துக்கொண்டு மறுபடி அவளை நோக்கி, 'ஆம்; நீ சொல்வது நிஜந்தான். இந்த ஊரில் ஏதோ விசேஷ சம்பவம் நடந்துதான் இருக்கவேண்டும். இருக்கட்டும். நீ இவ்வளவு சூrசமமாக இதைக் கண்டுபிடித்தாயே! இவர்களுடைய நிலைமையிலிருந்து விஷயம் இன்னவிதமானதாகத்தான் இருக்க வேண்டுமென்று நீ யூகித்துச் சொல்லமுடியுமா? எங்கே, சொல் பார்க்கலாம்” என்றார். அதைக் கேட்ட பெண்மணி நயமாகப் புன்னகை செய்து நிரம்பவும் பணிவாய்ப் பேசத் தொடங்கி, "அதெல்லாம் ஆண் பிள்ளைகளாகிய தங்களைப் போன்ற துரைசிங்கங்களுக்குத் தான் தெரியும். அடுப்பில் குழம்பு கொதிக்கையில், அதன் வாசனையைக் கொண்டு, அதற்கு உப்பு குறைவா, புளி குறைவா, மிளகாய் குறைவா என்பதைச் சொல்லச் சொன்னால், நான் தடையில்லாமல் உடனே சொல்லி விடுவேன். இந்தப் பெண் பிள்ளைகளின் விசனகரமான முகங்களைப் பார்க்கப் பார்க்க, என் தேகம் கட்டிலடங்காமல் துடிக்கிறது. இன்னதென்று கண்டு பிடிக்க முடியாத ஒருவித அநுதாபமும் இரக்கமும் இளக்கமும் தோன்றி என் மனசை இம்சிக்கின்றன. உடனே விசாரித்து விஷயத்தைத் தெரிந்துகொண்டு, நம்முடைய உதவி உபயோகப் படுமானால், நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஒருவிதமான துடிதுடிப்பு என் மனசில் பெருகி வதைக்கிறது; அதைத்தான் நான் சொல்லமுடியும். அதற்குமேல் அதிகமாக எதையும் நான் யூகித்துச் சொல்லக்கூடவில்லை?" என்றாள். அதைக் கேட்ட திவான் சந்தோஷமாகப் புன்னகை செய்து, 'அப்படியானால் நீ மகா சாமர்த்தியசாவி என்று தான் சொல்ல வேண்டும். சில பெண்பிள்ளைகளுக்குத் தாம் சாப்பிடும்போது கூட, உப்பு அதிகமா, புளிப்பு அதிகமா, காரம் அதிகமா என்பது தெரிகிறதில்லை. புருஷன் சாப்பிட்டுப் பார்த்து, இன்னது அதிகம் குறைவு என்று இடித்திடித்துச் சொன்னால்கூட ஆயிசு காலம் வரையில் சில பெண் பிள்ளைகளுக்கு மனசில் உறைக்கிறதே இல்லையல்லவா. அதை உத்தேசிக்க, நீ மகா