பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்கள் எலி 9 யெல்லாம் அந்தப் பெண்ணும் அநுபவிக்கக் கடமைப்பட்டவ ளாகி விடுகிறாள். அப்படி அநுபவிக்கப் பின் வாங்கினால், அவள் குடும்ப ஸ்திரீயல்ல; கேவலம் புருஷருடைய நன்மையை மாத்திரம் பங்கு போட்டுக்கொள்ள முன்வரும் தாசிகளுக்கு சமம் ஆவாள். ஆகையால், நாங்கள் இந்த ஏற்பாட்டிலிருந்து விலகிக்கொள்ளப் போகிறதில்லை. சாஸ்திரப்படி இந்தக் கலியாணம் நிறைவேறாது இருந்தாலும் வியவகாரத்திற்கும் நியாயத்திற்கும், அது நிறைவேறிவிட்டதாகவே, நாங்கள் மதிக்கிறோம். நாம் நாளை தினம் காலையில் யாரையாவது மனிதரை அனுப்பி, சாமர்த்தியசாலியான ஒரு வக்கீலை அமர்த்தி வாதாடி தங்களுடைய குமாரரை விடுவிக்கச் செய்வோம். அந்த விஷயத்தில் லக்ஷம் ரூபாய் செலவு செய்ய வேண்டுமானாலும், செய்து நாம் செய்யக்கூடிய பிரயத்தனங்களையெல்லாம் செய்து பார்த்துவிடுவோம். அதோடு, இப்போது வந்த துருக்கன் யார் என்பதையும் விசாரித்து அறிந்து, அவனுக்குத் தகுந்த சிrை நடத்தி வைப்போம். நாங்கள் தங்களுடைய வீட்டுக்குப்போவது நல்லதல்ல. போலீசார் தங்களுடைய வீட்டின் கதவை பலவந்த மாகத் திறந்து உட்புறத்தில் என்னென்ன அக்கிரமங்கள் செய்தி ருக்கிறார்களோ தெரியவில்லை. அதுவும் தவிர வீட்டின் திறவு கோல் இப்போது யாரிடத்தில் இருக்கிறது என்பதும் தெரிய வில்லை. தாங்கள் இப்போது ஆண் துணையில்லாமல் அந்த வீட்டில் தனியாக இருந்தால், இவ்வளவு பெருத்த தீம்பைக் கொண்டு வந்து வைத்தவர்கள் இன்னும் என்னென்ன அக்கிர மங்கள் செய்வார்களோ தெரியவில்லை. இப்போது இங்கே வந்த முரட்டு மனிதர்கள் அங்கேயும் வந்து ஏதாவது கலகம் செய்து அவமானப்படுத்துவார்கள். ஆகையால், தாங்கள் இதையே தங்களுடைய சொந்த கிரகம் போல மதித்து, செளகரியம்போல இருங்கள். பணத்தின் மூலமாகவும், தேகத்தின் மூலமாகவும், எங்களால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அவைகளை எல்லாம் கொஞ்சமும் லோபமில்லாமல் நாங்கள் சந்தோஷத்தோடு செய்கிறோம்; இனி நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்ற எண்ணமே தங்களுடைய மனசில் உண்டாகக் கூடாது. இரண்டையும் ஒன்றாகவே பாவிக்க வேண்டும்” என்று நிரம்பவும் விநயமாகவும், வாத்சல்யத்தோடும், இனிமையாகவும் கூறினாள்.