பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 117 பிறக்கலாமேயன்றி மனிதரால் நன்மை ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை. இதற்குமுன் இரண்டு தடவை நான் எப்படியோ சகித்துக்கொண்டு இருந்துவிட்டேன். இந்தத் தடவை என்னால் சகிக்க முடியவில்லை. நானும் கூடவே போகிறேன். என் புருஷர் சிறைச்சாலைக்குள் போனவுடன், நான் திவானுடைய வீட்டு வாசலில் நின்று பெரிய கல்லை எடுத்து என் தலையை உடைத்துக்கொண்டு அப்படியே விழுந்து செத்துப் போகப் போகிறேன். அதுதான் என்னுடைய முடிவான தீர்மானம். என்னை யாரும் தடுக்க வேண்டாம். பேசாமல் விட்டுவிடுங்கள்’’ என்று கூறிக் கோவெனக் கதறியழுது கண்ணிரை மாலை மாலையாய் ஒடவிட்டாள். அவளது பரிதாபகரமான வரலாற்றைக் கேட்டுக்கொண்டே இருந்த திவான் முதலியாருடைய மனைவி, சிறிது தூரத்தில் நின்று அந்த விருத்தாந்தங்களைக் கேட்டு, கண்கலங்கி நின்ற தனது கணவனை நோக்கி, "எனக்கு மயக்கம் வருகிறது. நான் கீழே விழுந்துவிடுவேன் போலிருக்கிறது. என்னைக் கொண்டு போய் மோட்டார் வண்டியில் விட்டுவிடுங்கள்' என்று மிருதுவாகக் கூறினாள். அதைக் கேட்ட மற்ற ஜனங்கள் எல்லோரும் தங்கள் ஊர்ப் பெண்பிள்ளையைக் கவனிப்பதை விட்டு திவானுடைய மனைவியை உற்றுக் கவனித்தனர். பக்கத்திலிருந்து, அந்தப் பரிதாபகரமான வரலாற்றைக்கேட்டுக் கொண்டிருந்த திவான் உடனே ஒடித் தமது மோட்டார் வண்டியைக் கொணர்ந்து அதன் கதவைத் திறந்து தமது மனைவியைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் அதில் ஏற்றி உட்காரவைக்க, அந்த அம்மாள் பொறிக் கலக்கமடைந்தவளாய் அப்படியே சாய்ந்துவிட்டாள். அப்போது நமது திவான் முதலியாரது நிலைமை இரு விதத்திலும் துன்பகரமாக இருந்தது. தமது ஆளுகையில் அத்தகைய பரமபாதகச் செய்கையைப் போலீசார் செய்கிறார் களே என்ற நினைவினால் அவரது தேகமும் மனமும் கட்டி லடங்காமல் பதறின. அந்த யெளவன தம்பதிகளின் இல்லற வாழ்க்கை அநியாயமாய்ச் சீர்குலைந்து போய்விட்டதே என்ற பரிதாபமும் மன இளக்கமும் தோன்றி அவரை அபாரமாய் வதைத்து அவரது மனத்தை நிலைகுலைக்கலாயின. அதோடு,