பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2O செளந்தர கோகிலம் வைபவங்களைக் கண்ட வீரம்மாள் முற்றிலும் பிரமிப்பும் திக்பிரமையும் கொண்டு, அதன் சொந்தக்காரர்களும், அவ்வளவு பட்சமாக அழைத்துவந்து உபசரித்து வைத்திருப்பவர்களுமான அந்த உத்தமகுண தம்பதிகள் யாரோ, எந்த நிலைமைக்கு உரியவர்களோ என்பதையறியாது மனத்தடுமாற்றம் அடைந்த வளாய் அன்றைய இரவைக் கழித்தாள். மறுநாட் காலையில் திவான் முதலியார் தமது ஸ்நானம் பூஜை முதலியவைகளை முடித்துக்கொண்டு தமது மாளிகையி லேயே கச்சேரியாக உபயோகித்து வந்த ஒரு பெருத்த மண்டபத்தில் தமது ஆசனத்தில் உட்கார்ந்து, எதிரில் மேஜைமீது கட்டுக் கட்டாய்க் கிடந்த சமஸ்தான சம்பந்தமான காகிதங் களையும் தஸ்தாவேஜுகளையும் ஒவ்வொன்றாய் எடுத்துப் படித்து உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் மறைவாக ஐந்து சேவகர்கள் அவரது பணிவிடை களைச் செய்வதற்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு சேவகன் திவானுக்கெதிரில் மெதுவாக வந்துநின்று, "எஜமானே! போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கத முதலியார் வந்திருக்கிறார். சரியாய்ப் பத்து மணிக்கு அவர் இங்கே வந்து எஜமானைப் பார்க்க வேண்டுமென்று எஜமானுடைய உத்தரவு ஆனதாம். அதற்காக வந்தாராம்' என்றான். உடனே திவான் தாம் செய்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து, “சரி, அவரை உள்ளே அனுப்பு” என்றார். சேவகன் உடனே வெளியில் போய் இன்ஸ்பெக்டரை உள்ளே அனுப்பி னான். அவர் அஞ்சி நடுங்கிப் பதுங்கி ஒதுங்கித் தமது தேகத்தைக் குன்ற வைத்துக்கொண்டு திவானுக்கெதிரில் வந்து குனிந்து நமஸ்காரம் செய்தார். திவான் என்ற பதவி, மகாராஜனுக்குப் பிரதிநிதி ஸ்தானம். ஆதலால், போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய அற்ப உத்தியோகஸ்தர்கள் திவானுடன் பேசும் சந்தர்ப்பம் கூடக்கிடைப்பதே அரிது. அவராகவே தம்மைப் பார்க்க வேண்டுமென்று வரவழைத்திருந்ததைக் கண்டு, இன்ஸ்பெக்டர் அதன் காரணம் இன்னதென்பதையும், அது நன்மைக்கோ, கெடுதலுக்கோ என்பதையும் அறியமாட்டாமல் தத்தளித்துக்