பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிவான் சாகேப், காங்கிமகி யம்மாள். ராஹா பககார் 135 எழுந்து வருத்தின. ஆனாலும், அந்தப் பெண்மணியின் தோற்றத்தில் ஒருவிதமான மிருதுத் தன்மையும், பணிவும், வசீகர சக்தியும் தோன்றி அவரது மனத்தை எப்போதும் அவர் விலக்க இயலாத அத்தகைய கவர்ச்சியினால் மேற்கொள்ளப்பட்டவராய், மந்திர சக்தியினால் கட்டுப்பட்டு நிற்கும் நாகம்போலத் தமது மனோவேகம், சுறுசுறுப்பு, ஊக்கம், தேகத்தின் பரபரப்பு முதலிய வற்றை அடக்கிக்கொண்டு அப்படியே ஒய்ந்து ஆநந்தமயமாய் மாறிப்போனார். அந்தப் பெண்ணரசியின் மகா ஆபூர்வமான வனப்பும், சிரேஷ்டமான கலியான குணங்களும், உத்தமமான நடையுடை பாவனைகளும் நேத்திராநந்தமான அலங்காரமும் ஒன்றுகூடி தெய்வீக சக்திவாய்ந்து காந்தம்போல அவரது மனத்தை வெகு சுலபத்தில் கவர்ந்துகொள்வது வழக்கம். ஆதலால் அவ்வாறே அன்றைய தினம் காலையிலும் அவள் வந்த போது அவர் அந்தப் பெண்மணியின் விஷயத்தில் வாத்சல்யமும் பிரேமையும் வடிவெடுத்தது போலக் காணப்பட்டார். அந்த அன்போடு மாதுரியமான பலவிதச் சிற்றுண்டிகளை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து, அதைத் தனது இடது கையில் தாங்கி, வலது கையில் பன்னீர் போலத் தெளிந்த சுத்த ஜலம் நிறைந்த வெள்ளிக் கூஜாவொன்றைச் சுமந்து பணிவாகக் குனிந்து மிருதுவாக அவரிடம் நெருங்கி வந்த காலத்தில், அந்த ஸ்திரீ ரத்னத்தின் காலில் நிறைந்திருந்த பாதஸரம் கலீர் கலீர் என்று சப்தித்தது. வெள்ளி மொட்டுகளும், காலாழிகளும் கிண் கிண்ணென்று ஒலித்ததும், பொற்கொடிபோல ஜ்வலித்த அவளது மேனியில் தகத்தகாயமாக மின்னிய புதிய பட்டாடையின் மடிப்புகளும் சுருள்களும் ஒன்றன்மேல் ஒன்று உராய்ந்து ஸ்ரஸரவென்று ஒசை உண்டாக்கியதும் இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு பிரத்யேகமான இன்பமாய்க் காணப்பட்டன. அந்த மாதரசி தனக்குத் தெரியாமல் தன்னிடம் அத்தகைய அபூர்வ சக்தியும் கவர்ச்சியும் வசீகரத் தன்மையும் நிறைந்து இருக்கின்றன என்பதை உணராதவளாய்த் தனது பர்த்தா ஏதோ சர்க்கார் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது அநுமதியின்றித் தான் உள்ளே வந்ததைக் குறித்து அவர் தன்மீது கோபம் கொள்வாரோ என்று அஞ்சி அஞ்சி நடந்து மான்போல மருண்டு தயங்கித் தயங்கி அடிவைத்து அவரண்டையில் வந்து