பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 செளந்தர கோகிலம் வேடிக்கையாகவும், தமது மனையாட்டியை ஸ்துத்தியம் செய்தும் கூறிவிட்டுத் தமது காகிதக் கட்டைக் கவனிக்கலானார். அவரது சொற்களைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த பெண்மணி பலகாரங்களை எடுத்தெடுத்து மிகுந்த வாஞ்சையோடு அவரது வாயில் போடத் தொடங்கினாள். திவான் அரை நாழிகை காலத்தில் அவசர விஷயங்களை யெல்லாம் படித்து உத்தரவு பிறப்பித்துவிட்டு, தபாற்காரனால் கொணர்ந்து கொடுக்கப்பட்டிருந்த கடிதங்களை எடுத்துப்பார்க்க ஆரம்பித்தார். அவர் முதலில் எடுத்தது இராஜாங்க சம்பந்தமான ஒரு விண்ணப்பம். திவான் அதைப்படித்து, அதற்குத் தகுந்த உத்தரவை எழுதியபடி தமது மனையாளைப் பார்த்துப் புன்னகை செய்து, 'இன்றையதினம் நாம் செய்வது நல்ல ஏற்பாடு. ஒரே காலத்தில் இரண்டு காரியங்களும் முடிகின்றன. என் கச்சேரி வேலையும் ஆகிறது. வயிற்று வேலையும் எனக்குத் தெரியாமலேயே நடந்துகொண்டிருக்கிறது. சாப்பாட்டுக்கென்றே நான் செலவிடும் காலம் இப்போது வீணாகாமல் சர்க்கார் வேலைக்கு உபயோகப்படுகிறது. அதுவுமன்றி, பலகாரங்களில் கவனம் சென்றால், அதில் உப்பில்லை, இதில் புளி இல்லை என்று சொல்லவேண்டுமென்ற எண்ணமும் உண்டாகும். அதற்கும் இடமில்லாமல் போகிறது. பலகாரங்களில் எவ்வித மான குற்றமிருந்தாலும், அது தெரியாமல் போகிறது. இம் மாதிரியே இந்த வேலை தினம் தினம் நடந்தால்கூட அது நல்லதுதான் என்று நினைக்கிறேன்' என்று வேடிக்கையாக மொழிந்தார். அதைக் கேட்ட பெண்மணி நிரம்பவும் பணிவாகவும் கனிவாகவும் அவரை நோக்கி, 'இவ்விடத்து சித்தத்தின்படி நடந்துகொள்ள அடியாள் காத்திருக்கிறேன். அடியாள் இன்றைக்கு மாத்திரமா அடியாள். நாச்சியார் சொல்லியிருப்பது போல எற்றைக்கும் ஏழேழ் பிறப்பிற்கும் அடியாள், தங்களுக்குக் குற்றேவல் செய்யக் கடமைப்பட்டவளாயிற்றே" என்றாள். அவளது இனிய சொற்களைக் கேட்ட திவான் கட்டிலடங் காத குதுரகலமும் ஆநந்தமும் எய்தி, 'பலே! நன்றாகச் சொல்லு கிறாயே! நீ வைஷ்ணவ முதலியார் வீட்டுப் பெண்ணல்லவா.