பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதுர் 143. இன்பத்தையெல்லாம் அவர்கள் கொள்ளையடித்துப் போட்டுக் கொள்ளுகிறார்கள்' என்று நிரம்பவும் கொஞ்சலாகக் கூறினாள். அதைக் கேட்ட திவான் தமது சந்தோஷத்தை அடக்க மாட்டாதவராய்ச் சிரித்து, 'ஆம். நீ சொல்வது வாஸ்தவந்தான். எனக்குப் பணிவிடைகள் செய்வது உனக்கு இன்பகரமாய் இருக்கலாம். ஆனால், சம்பளத்திற்கு வேலை பார்க்கும் கூலியாள்களுக்கு அது ஒரு நாளும் இன்பகரமாய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சிலருக்கு அது சர்வசாதாரணமாய் இருக்கும்; சிலருக்குத் துன்பகரமாகக் கூட இருக்கும்; எவருக்கும் இன்பகரமாக இருக்காது. ஒரு குழந்தை தன்னுடைய கைவிரலை ஆநந்தமாகச் சப்பிக்கொண்டே இருக்கிறது. அதற்கு அதில் ஒரு பெரிய இன்பம் இருப்பதாய்த் தெரிகிறது. நம்மைப் போன்ற வர்களுக்கு அந்த விரல் உப்புக்கரிப்பாக இருக்கிறது. இதற்குக் காரணம் மனிதருடைய மனப்பிரமையேயன்றி வேறல்ல. ஒரு மனிதன் எந்தக் காரியத்தையும் பிரேமையோடும் ஆசையோடும் செய்தால், அது உண்மையில் ஆநந்தமாகத்தான் தோன்றும்; மனிதர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தங்கள் தங்கள் கடைமைகளையும் வேலைகளையும் மிகுந்த ஆசை யோடும் பிரேமையோடும் செய்வதுதான் மகா சிலாக்கியமானது. ஒரு பெண்ஜாதி தன் புருஷனிடம் உண்மையான வாத்சல்யமும் பிரேமையும் வைத்து அவனுக்கு உப்பில்லாத கஞ்சியைக் கொடுக்கிறாள். அதே கணவனுக்கு ஒரு பரிசாரகன் பஞ்சபசுதிய பரமான்னங்களைச் சமைத்து உயிரற்ற யந்திரம்போல வந்து வந்து ஒழுங்காகவும் ஏற்பாடாகவும் பரிமாறுகிறான். இந்த இரண்டில் எது சிலாக்கியமானது, எதில் புருஷனுக்கு உண்மை யான ஆநந்தம் உண்டாகும் என்று என்னைக் கேட்டால், பிரேமையோடு ஊட்டப்படும் கஞ்சிதான் நம் மனத்திற்கு உகந்ததாக இருக்குமென்று சொல்லுவேன். இதையெல்லாம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்ப் பார்க்க, பணிவிடைக்கு ஏராளமான ஆட்களை வைத்துக்கொண்டு வெளிப் பார்வைக்குப் படாடோபமாய் இருக்கிற பெரிய மனிதர்களைவிட அன்பு நிறைந்த கற்பிற்கரசியான தன் பெண்ஜாதியினுடைய மன மார்ந்த சிருஷ்டிகளை அடைகிற புருஷனே உண்மையான பாக்கியவான்; அவனே முன் ஜென்மத்தில் தவம் செய்தவன்