பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 153 நாம் கட்டிக் கொடுத்துவிடுவோம்’ என்று அண்ணாசாமி முதலியாரும் அவருடைய சம்சாரமும் இப்போது பேசி கொள்வதாகப் பல தடவைகளில் எனக்குச்செய்தி எட்டியது. அவர்களை நான் பார்க்க நேரும் போதெல்லாம், அவர்கள் இதுவரையில் வேறே எவருக்கும் காட்டியிராத பிரியத்தையும் மரியாதையையும் காட்டி என்னை உபசரித்து அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வரும்படி வருந்தியழைக்கிறார்கள். மனிதன் கேவலம் பதராக இருந்தாலும், அவனிடம் பணம் மாத்திரம் இருக்கும். ஆனால், அவனுக்கு எப்பேர்ப்பட்ட பூஜிதையும் பெருமைப் பாடும் கிடைக்கின்றன. மனிதனிடம் சகலமான யோக்கியதை களும் இருந்தாலும், அவனிடம் பணம் மாத்திரம் இல்லாமல் போகுமானால், அவன் கேவலம் நடைபிணத்துக்குச் சமானமாய் மதிக்கப்படுகிறான். ஊரின் நிலைமை இப்படி விநோதமாக இருக்கிறது. என்னுடைய மனசில் இருந்து என்னை வதைத்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் என்ன என்பதை ஜனங்கள் தெரிந்து கொள்ளாமல் தறுமாறாகப் பிதற்றுகிறார்கள். நானோ குடுகுடு கிழவனாகிவிட்டேன். காடு வாவா வென்கிறது; வீடு போ போ வென்கிறது. எப்போது உன் தாயார் என்னை விட்டுப் பிரிந்து போனாளோ அன்றைய தினமே என் உயிரும் என் உடம்பை விட்டுப் பிரிந்து போய்விட்டதென்றே சொல்ல வேண்டும். நான் வெற்றுடம்பாய், சாகவும் மாட்டாமல் எமனுலகத்தின் வாசற் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன். உன்னையும், உன் சம்சாரம், குழந்தை முதலியோரையும் நினைத்துக்கொண்டும், உங்களை எப்படியும் பார்த்து ஆநந்திக் கலாம் என்று எண்ணிக்கொண்டும் இருப்பதே என்னுடைய வெற்றுடம்புக்கு ஒர் உயிர்போல இருப்பதால், அந்த பலத்தையே முக்கிய ஜீவாதாரமாகக் கொண்டு நான் இருந்து வருகிறேன். இப்போது சென்ற ஒரு மாசகாலமாய் உங்கள் எல்லோரை யும் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றி, அது முற்றிப் பெரிய பைத்தியம் ஆகி, புத்தியைக் கலக்கி, ஒயாமல் என்னை சஞ்சலத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. அதுவுமன்றி, நம்முடைய ஈசுவரன் கோவிலில் பிரம்மோத்சவம் வருகிறது. நாளைய தினம் கொடி ஏறப்போகிறது. இதுவரையில் எந்த