பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 155 மறுநாள் நல்ல நாளாகையால் அன்றைய தினம் தவறாமல் நீ செளபாக்கியவதி காந்திமதியம்மாளையும் குழந்தை ராஜாபக துரையும் அவனுடன் கூட்டி அனுப்பி வைக்கவேண்டியது. பிறகு நீ என்றைய தினம் புறப்பட்டு வரப்போகிறாய் என்று அவர்களிடம் சொல்லியனுப்பவும். அவர்களை அனுப்பும்போது, பச்சைக்கொட்டைப் பாக்கு நாலைந்து குலைகள், நேந்திரங்காய் நூறு, மலையாளத்துச் செல்லப் பெட்டிகள் இரண்டு, இன்னும், அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய விநோதமான சாமான் ஏதாவதிருந்தால் அதையும் அனுப்பி வைக்கவும். அவர்கள் வந்தவுடன் மறுபடி நான் எழுதுகிறேன். - அநேக ஆசீர்வாதம், குஞ்சிபாத முதலியார் என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிக்கவே, திவான் முதலியாரது மனம் பிதிர் வாஞ்சையில் இளகியது. தமது தந்தை முதிர்வடைந்திருக்கும் நிலையில் நெடுந்துரத்தில் தனிமையி லிருந்து பிரிவாற்றாமையால் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்ததைப் பற்றி திவான் மிகுந்த கலக்கமும் சஞ்சலமும் அடைந்தார். தந்தையின் மனம் திருப்தியும் சந்தோஷமும் அடையும்படி தாம் எந்தக் காரியத்தையும் செய்யக் கடமைப்பட்டிருப்பதாக அவர் எண்ணினார். அவரது விருப்பத்தின்படி தாம் தமது திவான் ஸ்தானத்தைவிட்டு ஒரு நாளைக்குக்கூட ரஜா எடுத்துக்கொண்டு போவது அநுசிதமாகத் தோன்றியது. ஆயினும் அவரது இச்சைப்படி தமது மனையாட்டியையும் குமாரனையும் சுமார் பதினைந்து தினங்கள் வரையிலாவது அனுப்பி வைப்பது அவசியமாகப்பட்டது. ஆனால், அதுகாறும் தன் மனைவி தம்மைவிட்டுப் பிரிந்து ஒரு தினங்கூட எவ்விடத்திலும் இருந்ததில்லை. ஆதலால், அவள் மனத்திற்கு அந்த ஏற்பாடு எவ்விதமிருக்குமோ என்ற நினைவும் கவலையும் எழுந்தன. அவர் உடனே தமது மனையாளினது முகத்தை நோக்கினார். அந்தப் பெண்மணி அந்தக் கடிதம் படிக்கப்பட்டபோது மிகுந்த பயபக்தி விநயத்தோடு அதைக் கேட்டுக்கொண்டே