பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 173 அப்படியே வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்களது மனத்தில் பெருகி நிறைந்திருந்த பிரிவாற்றாமை ஒர் உலகத்தையும் போர்த்தத்தக்கதாய் இருந்தது என்பதை அவர்களது - முகத்தோற்றமே கண்ணாடிபோல வெளியிட்டது. அவர்களது ஆடைகளும் மற்ற சில்லரை சாமான்களும் அடங்கிய பெட்டிகளை வண்டியில் வைத்துவிட்டு தவசிப்பிள்ளையும், வேலைக்காரனும் வேலைக்காரியும் வண்டியண்டை ஆயத்தமாக நின்றனர். காந்திமதியம்மாளும், புதல்வன் ராஜாபகதூரும் ஏறி வண்டியில் உட்கார்ந்து கொண்டனர். வண்டிக்காரன், 'ஒட்டலாமா?’ என்றான். திவான், "சரி: ஒட்டு' என்று கூறிவிட்டுத் தமது பார்வையை வண்டிக்குள் செலுத்தி அன்பே நிறைவாக அதற்குள் இருந்த இரண்டு அழகிய வடிவங்களையும் மனங்குளிரப் பார்த்தார். அப்போது, வண்டி நகரத் தொடங்கவே உள்ளே இருந்த இருவரும் வாய் திறந்து பேசவும் வல்லமையற்றவராய் நிமிர்ந்து திவானினது முகத்தை உற்றுப் பார்த்தனர். அவர்கள் மூவரது விழிகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒர் உலகமடங்கிய செய்தியைக் கூறி விடை பெற்றுக்கொண்டன. பத்துநிமிஷம் வரையில் அந்தக் காட்சி நீடித்திருந்தது. வண்டி தெருக்கோடியை யடைந்து அப்பால் திரும்பியவுடன் மறைந்துபோயிற்று. அதுவரையில் அந்த இன்ப வடிவங்களிலேயே தமது மனம் முழுதையும் லயிக்கவிட்டு மெய்ம்மறந்து அசைவற்றுச் சித்திரப் பதுமைபோல நின்று கொண்டிருந்த திவான், வண்டி மறைந்துபோன பிறகும் சிறிது நேரம் தமது சுய உணர்வைப் பெறாமலேயே இருந்து, பத்து நிமிஷ நேரங்கழித்து அவ்விடத்தை விட்டுத் தமது விடுதிக்குப் போய்ச் சேர்ந்தார். அப்போது வெளியுலகத்தில் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்ததானாலும், அது அவரது உணர்ச்சியில் படாமல் போனமையால், அது இரவு போல ஒரே இருள் மயமாகக் காணப்பட்டது. அவரது மனத்திற்குள் மறைந்திருந்த சதாகாலமும் அபாரமான குதுகலத்தையும் ஊக்கத்தையும் ஆநந்தத்தையும் உண்டாக்கிக்கொண்டிருந்த முக்கியமான ஒரு ஜீவாதார சக்தி திடீரென்று இல்லாமல் போய்விட்டது போல அவருக்குத் தோன்றியது. கூடிண மாத்திரத்தில் கண்ணொளி மழுங்கப்பெற்ற மனிதன் போல