பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 187 அவன் அவ்வாறு கூறிய சமயத்தில் திவானினது மனத்தில் இன்னொரு யோசனை தோன்றியது. தாம் மஞ்சட்குப்பம் கலெக்டருக்குக் கடிதம் எழுதியதோடு சும்மா இருந்துவிட்டால், அண்ணாசாமி என்ற மனுதாரன் தான் செய்த மோசடியை யாரும் கண்டுபிடிக்கவில்லையென்று நினைத்து, மேன்மேலும் அதே வழியில் இறங்கிக் கெட்டுப் போவானென்ற எண்ணம் உதித்தது. ஆகையால், தாம் அவனுக்கு உத்தியோகம் செய்து வைப்பது மாத்திரம் போதாதென்றும், அவன் மேன்மேலும் கெட்டுப்போகாமல் தடுப்பதே முதன்மையான காரியமென்றும் நினைத்து, அவனுக்கே தாம் நேரில் ஒரு கடிதம் எழுதியனுப்பி அவனை எச்சரிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவ ராய்த் தமக்கெதிரிலிருந்த சமையற்காரனைப் பார்த்து, முத்துசாமி! அஞ்சல்காரன் புறப்பட்டுப் போய்விட்டானா என்று விசாரித்துக் கொண்டுவா?’ என்றார். அவன் வெளியில் போய்த் திரும்பி வந்து, 'அவன் இந்நேரம் இரண்டு மைல் தூரம் போயிருப்பான் என்கிறார்கள்' என்றான். திவான் சிறிது யோசனை செய்து, "சரி; இந்த ஊரில் தபால் ஆபீஸ் ஒன்று இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு தடவை தான் இங்கே இருந்து தபால்களைக் கட்டியனுப்புவது வழக்கம். இன்று தபால் அனுப்பும் தினம். நீ உடனே தபாலாபீசுக்குப் போய்த் தபால் கட்டு போய்விட்டதா என்று விசாரித்துக்கொண்டுவா. அதற்குள் நான் ஒரு கடிதம் எழுதி வைக்கிறேன்" என்றார். உடனே முத்துசாமி அப்படியே செய்வதாகச் சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டான். உடனே திவான் திருவிடமருதூர் அண்ணாசாமிக்கு அடியில் வருமாறு ஒரு கடிதம் எழுதினார் : ஐயா! நீர் சமீப காலத்தில் மஞ்சட்குப்பம் ஜில்லா கலெக்டர் துரைக்கு உத்தியோக விஷயமாக மனுக் கொடுத்துக் கொண்டீர் அல்லவா, அதோடுகூட நீர் வைத்தனுப்பிய என்னுடைய நற்சாகதி பத்திரத்தை அவர் என்னிடம் அனுப்பி உமக்கு உத்தியோகம் கொடுக்கலாமாவென்று கேட்டிருக்கிறார். அவர் என்னுடைய ஆப்த நண்பர் என்பதை நீர் தெரிந்துகொண்டே அதை அவருக்கு அனுப்பினிரோ அல்லது, தெரிந்துகொள்ளமல்