பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 2C5 குரலின் இனிமை வீணாகானம் போல என்னைப் பரவசப்படுத்தி விட்டது. கோகிலம் என்று உனக்குச் சரியான பெயரையே வைத்திருக்கிறார்கள். பெண்ணே உன்னை நான் வைதேனா, துஷித்தேனா, அல்லது கடிந்து கொண்டேனா, உன்னிடம் நான் பிரியந்தானே காட்டுகிறேன். நீ ஏன் இதற்குள் இவ்வளவு ஆத்திரப்பட்டுப் பேசுகிறாய்? நான் யார் என்பது உனக்குத் தெரியவில்லையென்பது நிஜமே. அதை நான் வெளியிடாமல் இருப்பேனா, உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் இப்பேர்ப் பட்ட துன்பகரமான நிலைமையில் என் சிநேகம் உனக்குத் தானாக வந்து வாய்ப்பது பெருத்த அதிர்ஷ்டமென்றே நீ நினைத்து அதைப்பற்றி அளவற்ற சந்தோஷமடைவாய் என்பது நிச்சயமான விஷயம். ஆனால் நீ நினைக்கிறதுபோல, உன்னை நான் அறிந்துகொள்ளாமல் இருக்கவில்லை. நீ துபாஷ் ராஜரத்தின முதலியாருடைய மூத்த பெண் கோகிலாம்பாள் என்பதை நான் நன்றாக அறிவேன். உன்னுடைய பெயரையும் குணாதிசயங் களையும் யோக்கியதையும் நான் நன்றாகத் தெரிந்து கொண்டே உன்னை இங்கே வரவழைத்தேன். ஆகையால், எனக்கு நீ முகமறியாத அன்னிய மனுஷியல்ல. அந்த விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டியதில்லை. உனக்கு இப்போது சுமார் பதினாறு அல்லது பதினேழு வயசிருக்குமென்று நினைக்கிறேன். இவ்வளவு வயசுள்ள தங்கையையும் நான் படைக்கவில்லை. இவ்வளவு பெரிய பெண்ணைப் பெறவும் எனக்கு அதிக வயசு ஆய்விட்டதென்று நீ எண்ணுவதுபோல இருக்கிறது. எனக்கு இப்போது சரியாய் முப்பது வயசுகூட ஆகவில்லை. உன் வயசுடைய பெண்களை நான் சம்சாரமாக வைத்து அனுபவிக்கத் தக்க விட புருஷனேயன்றி நீ எண்ணுகிறபடி நான் கிழவனல்ல. அதைப் பற்றியும் உனக்கு எள்ளளவும் கவலை வேண்டாம். அதுவுமன்றி. நீ தக்க கண்ணியமான குடும்பத்தைச்சேர்ந்த குலஸ்திரீ என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கேவலம் காசுக்குத் தங்களது ஆசையையும் தேகத்தையும் விற்கும் தாசிகளையும் வேசைகளையும் கண்டு ஆசை கொள்ளுகிறவர்கள் யாரென்றால், கொஞ்சமும் விவஸ்தையில்லாத தூர்த்தர்களே அப்படிச் செய்வார்களன்றி என்னைப் போன்ற கண்ணியமான குடும்பஸ்தர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். நீ எப்படித் தக்க