பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 2O7 அந்த இடத்தில் அகப்பட்டுக் கொண்டதைப்பற்றி அவள் அளவற்ற கலவரம் அடைந்தாள். ஆனாலும், தனது மனோ திடத்தை மாத்திரம் இழக்காமல் உறுதியாக இருந்து கீழ்ப் பார்வையாக அவரைப் பார்த்து மிருதுவாகப் பேசத் தொடங்கி, "நான் இங்கே வந்ததும், நீங்கள் என்னிடம் தகாதவிதமாய் நடந்து கொண்டதும் தற்செயலாய் நேரிட்ட தவறுகளென்று நான் இதுவரையில் எண்ணியது தப்பு என்பது இப்போது நன்றாகத் தெரிந்துவிட்டது. போலீஸ் ஜெவான்கள் உங்கள் வீட்டு வாசலில் இருப்பதிலிருந்தும், போலீஸ் ஸ்டேஷனில் சிறைவைக்கப்பட்டு இருக்கும் எங்கள் பந்துவினிடம் நீங்கள் கடிதம் வாங்கிக்கொண்டு வந்ததிலிருந்து நீங்கள் போலீஸ் இலாகாவைச் சேர்ந்த அதிகாரியாய்த்தான் இருக்க வேண்டும் என்பதும் நிச்சயமாய் விளங்குகிறது. என் வருகையை நீங்கள் எதிர்பார்த்திருந்ததாகச் சொல்வதிலிருந்தும், உங்கள் மனிதன் எங்களிடம் சொன்னதெல்லாம் பொய்யென்பதும், நீங்கள் என்மேல் ஏதோ துர் ஆசைகொண்டு வேண்டுமென்றே சூழ்ச்சிசெய்து என்னை வரவழைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்றாகத் தெரிகின்றன. எங்களிடம் பொய்ச்சொல்லி எங்களை வஞ்சித்ததுபோல நீங்கள் உங்கள் வசத்தில் உங்கள் சிறைச் சாலையிலிருக்கும் எங்கள் பந்துவையும் நீங்கள் ஏமாற்றியே இந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டுமென்று அவர்கள் ஒரு நாளும் எழுதியே இருக்க மாட்டார்கள். நீங்கள் ஏதோ தந்திரம்செய்து அவர்கள் எங்களுக்கு இம்மாதிரி கடிதம் எழுதியனுப்பும்படிச் செய்திருக் கிறீர்கள். நான் வந்தபோது வழியிலிருந்த போலீஸ் ஜெவான் எங்கள் வண்டிக்காரனைப் பிடித்துக் கொண்டுபோனது கூட, உங்களுடைய சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டுமென்று நான் இப்போது எண்ணுகிறேன். எங்கள் பந்துவின் வீட்டில் தபால் திருட்டில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் புதைக்கப்பட்டிருந்தன என்று நீங்கள் கொண்டு வந்திருப்பதும் கற்பனையாகவே இருக்கவேண்டும். என் மேல் நீங்கள் கொண்டுள்ள துராசையை நிறைவேற்றும் கருத்தோடுதான் நீங்கள் எங்கள் பந்துவின்மேல் பொய்க் குற்றம் சுமத்தி நல்ல சமயத்தில் அவர்களைப்