பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 211 நீ அவரிடம் அந்தரங்கமான பிரியம் வைத்திருக்கிறாயாம். அவர் உன்னுடைய உயிரை இரண்டு தடவைகள் காப்பாற்றி விட்டாராம். அந்த உதவியை நீ மறக்கமாட்டாய் என்றும், செய்யாத எந்தக் காரியத்தையானாலும் செய்து அவரைக் காப்பாற்ற அவசியம் முன்வருவாய் என்றும் அவர் உறுதியாக நம்பி இருக்கிறார். நீ இங்கே வந்தபிறகு, நாங்கள் சொல்வதை நீ உண்மையென்று நம்பாவிட்டால், உங்களுக்குள் ரகஸியமாக நடந்த ஒரு சங்கதியை அவர் அடையாளமாகச் சொல்லச் சொன்னார். நீ உங்கள் பங்களாவின் தோட்டத்தில் தனியாக ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்திருந்த சமயத்தில் அவர் பின்னால் வந்து உன்னைத் தூக்கி அப்பால் எடுத்துக்கொண்டு போய் உன்னை பாம்பு கடிக்காமல் காப்பாற்றினாராம். அதன்பிறகு நீயும் அவரும் கொஞ்சநேரம் தனிமையிலிருந்து செய்த லீலைகளையெல்லாம் உனக்கு நினைவூட்டினால், நீ அந்தக் குறிப்பை உடனே அறிந்து கொள்ளுவாயென்றும் அவர் சொன்னார். உனக்கும் அவருக்கும் கலியாணம் நிறைவேறு வதற்கு முன்பே, நீ அவரிடம் அவ்வளவு தாராளமாய் நடந்து கொண்டவள். ஆகையால், இந்த விஷயத்தைப் பற்றி உனக்கு அதிகமாய் எடுத்துச்சொல்ல வேண்டுவதில்லையென்றும், நீ உடனே குறிப்பை அறிந்துகொள்வாயென்றும் அவர் தெரி வித்தார். இப்போது உண்மையை உள்ளபடி தெரிந்து கொண்டாயா? இனி நீ எவ்வித ஆட்சேபமும் சொல்லாமல் என் கருத்துக்கு இணங்கி வருவாயென்று நினைக்கிறேன். துர நிற்கவேண்டாம் என் கிட்டவா. நாமிருவரும் போய் நமக்காகக் காத்திருக்கும் கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டு சந்தோஷ மாகப் பேசுவோம்" என்று நிரம்பவும் நயமாகவும் உருக்க மாகவும் கூறினார். அவர் கூறிய சொற்களைக் கேட்ட பெண்ணரசி முற்றிலும் திகைப்பும் ஆத்திரமும் அடைந்து பதறி நின்றவண்ணம் அவரைப் பார்த்து, 'ஐயா! நீங்கள் சொல்வது கேழ்வரகில் நெய் ஒழுகுகிறதென்ற கதைபோல இருக்கிறதன்றி வேறல்ல. நீங்கள் சொல்லும் கட்டுக் கதையை உண்மையென்று நம்பக்கூடிய பைத்தியக்காரி நானல்ல. கடவுள் இந்த உலகத்தில் உங்கள் ஒருவருக்குத்தான் பகுத்தறிவைக் கொடுத்திருப்பதாகவும்,