பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 213 மயிரைப் பிடித்து இழுத்துவந்து துச்சாதனன் செய்ததுபோல ஒரு நொடியில் உன்னை மானபங்கப்படுத்த எனக்கு வல்லமையுண்டு; நான் முன்னமே சொன்னது போல, தடியைக் கொண்டடித்துக் கணிய வைப்பதைவிடத் தானாகவே கனியும்படி செய்வதே நலமானதென்ற ஒரு நினைவிலேயே நான் இதுவரையில் பொறுத்து நின்றேன். நான் இப்போது முடிவாகவும் கடைசியாக வும் சொல்லி எச்சரிக்கிறேன். மரியாதையாக நீ வழிக்கு வரப் போகிறாயா? இல்லாவிட்டால், நான் என் பாணத்தைத் தொடுக்கலாமா? நான் ஒருவன்தானே இருக்கிறேனென்று நினைத்து நீ கடைசிவரையில் முரண்டலில் இறங்கி ஜெயித்து விடலாமென்று நினைத்துக் கொண்டிருக்கலாம். அது வீண் எண்ணம். இந்த அறைக்கு வெளியில் பத்து ஜெவான்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏவினால், எமகிங்கரர்கள் போல எல்லோரும் வந்து உன் கைகளையும் கால்களையும் பிடித்து இழுத்துக் கட்டிலின் நான்கு கால்களிலும் இறுகக் கட்டி விடுவார்கள். அதற்குமேல் உன் நடனமெல்லாம் பலிக்காது. வீணாய் என் கோபத்தைக் கிளப்பிவிட்டு, நல்ல உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே. நீ பேசும் மாதிரியிலிருந்து, நீ நல்ல விவேகியென்று நான் யூகிக்கிறேன். ஆகையால், இந்தச் சந்தர்ப்பத் திற்குத் தகுந்தபடி நீ புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு எங்களால் ஆகவேண்டிய காரியங்களை நிறைவேற்றிக்கொள். வீணாய்ப் பிடிவாதம் செய்து நான் முரட்டுத் தனத்தில் இறங்கும் படிச் செய்யாதே' என்று கூறி அதட்டினார். அவரது சொற்களைக் கேட்ட கோகிலாம்பாள் சிறிதும் அச்சம் கொள்ளாமல், 'ஐயா! நீங்கள் துச்சாதனனுடைய உபமானத்தைச் சொன்னது, கும்பகர்ணன் நித்தியத்துவம் கேட்க எண்ணி நித்திரைத்துவம் கேட்டதுபோல் இருக்கிறது. நீங்கள் செய்யும் அக்கிரமத்தை கண்டிக்க இவ்விடத்தில் இப்போது யாரும் இல்லையென்கிற எண்ணத்தினால் நீங்கள் வீண் மமதைகொண்டு பேசவேண்டாம். சகலமான உலகங்களையும், அவைகளுள் அடங்கிய எல்லா ஜீவன்களையும் படைத்துக் காத்து அழிக்கிற கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் எங்கும். நிறைந்திருந்து எல்லோருடைய செய்கைகளையும் பார்த்துக்