பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 செளந்தர கோகிலம் எத்தனித்தால், அப்போதும் அவள் அந்த இடம் இன்னது என்பதை அவசியம் உடனே கண்டுகொள்வாள், அதோடு தனக்கு அவர்களது வீட்டின் ருணம் அற்றுப்போவது நிச்சயத்திலும் நிச்சயம் என்று நினைக்க நினைக்க மினியனுக்கு அப்போதே அடிவயிற்றில் பெரிய கலக்கமும் குமுறலும் ஆரம்பித்தன. அவன் அத்தகைய விபரீத நிலைமையில் இருக்க, மேலும் இரண்டொரு நிமிஷ நேரத்தில் வண்டி எதிரிலிருந்த தோப்பிற்குள் நுழைந்தது. நுழையவே, மினியனது மனவேதனை யும், தேக அவஸ்தையும் அவனால் தாங்க இயலாத உச்ச நிலையை அடைந்தன. அந்தத் தோப்பிற்குப் பக்கத்தில் தாழைகள் நிறைந்த மணல் பரப்பும், அதற்கப்பால் விஸ்தாரமான கடலும் இருக்கின்றன. தோப்பையடுத்தாற் போல அந்த ரஸ்தாவில் பிரம்மாண்டமான ஒரு இரும்புப்பாலம் இருக்கின்றது. அந்தப் பாலத்தண்டையில் வண்டியை நிறுத்தும்படி கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தார் அவனிடம் கோரியிருந்தார். ஆதலால், அது அந்த இடத்தை அடைவதற்கு முன்பே மினியனது நிலைமை பரம வேதனையான நிலைமையாகிவிட்டது. உண்மையிலேயே அவனுக்கு விலக்கமுடியாத ஒருவித தேகபாதை ஏற்பட்டு விட்டது. அவன் அந்த ரஸ்தாவின் இரண்டு பக்கங்களிலும் வெகுதூரம் வரையில் தனது பார்வையைச் செலுத்தியதன்றி, இரண்டு பக்கங்களிலுமிருந்த மறைவுகளையும் உற்று நோக்கினான். கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தார் எவ்விடத்திலும் காணப்படவில்லை. அவர் வருகிற வரையில் தான் அவ்விடத்தில் வண்டியை நிறுத்தினால், கோகிலாம்பாள் அதன் காரணமென்ன என்று கேட்பதோடு, வெளிப் பக்கத்தையும் கவனித்துப் பார்ப்பாள். ஆதலால், தான் அகப்பட்டுக்கொள்வது நிச்சயம் என்று நினைத்த மினியன் வண்டியை இரும்புப் பாலத்தின் ஆரம்பத்தில் நிறுத்திவிட்டு சடக்கென்று கீழே குதித்து, 'சாமீ! எனக்கு அடிவவுத்துல என்னமோ தொந்தரவு பண்ணுதுங்க. வண்டி இப்பிடியே ஒரு நிமிச நேரம் நிக்கட்டுங்க. இந்த வாராவதிக்குக் கீயே போயிட்டு இதோ வந்துட்றேனுங்க” என்று கூறிய வண்ணம், அவள் ஏதேனும் மறுமொழி கொடுப்பாளோ என்பதையும் கவனிக்காமல் விசையாக நடந்து பக்கத்திலிருந்த சரிவின் வழியாகக் கீழே இறங்கி இரும்புப் பாலத்தினடியில்