பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 237 முத்துசாமி திவான் முதலியார் மூர்ச்சித்து மேஜையின் மீது குப்புறச் சாய்ந்து போனதைக் கண்டு சகியாதவனாய்த் தான் அநுபவித்த நரக வேதனையைச் சிறிது நேரம் மறந்து ஒருவித ஆசேவம் கொண்டவனாய் எழுந்தோடி சமையலறைக்குள் சென்று, ஒர் ஈரத் துணியையும், தண்ணிரையும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து துணியினால் திவானினது முகத்தைத் துடைத்து விட்டு, அவரை நிமிர்த்தி நாற்காலியில் சார்த்தி வாயைத் திறந்து தண்ணிரை வார்த்து, அவர் இரண்டொரு வாய் விழுங்கும்படிச் செய்தான். அந்த அபாய வேளையில் தான் வேறே மனிதர்களை உதவிக்கு அழைத்தால் அவர்களிடம் தான் உண்மையான தகவலைச் சொல்ல நேரிடுமென்றும், அவ்வாறு தான் செய்வது உசிதமல்லவென்றும் முத்துசாமி எண்ணினான்; திவான் முதலியாரது மனையாட்டியைப்பற்றிய விஷயத்தைத் தான் மற்றவர்களுக்குத் தெரிவித்து, திவானுக்குத் தலைகுனிவை ஏற்படுத்துவது உசிதமான காரியமல்ல என்று அவன் நினைத் தான். தான் விஷத்தைத் தின்ற வரலாற்றை மற்றவர் கேட்பார்களாயின், தன்னை அவர்களெல்லோரும் துகைத்துச் சித்திரவதை செய்வார்களென்ற எண்ணம் உண்டானது. ஆயினும், தன்னைப்பற்றியே அவன் கவலை கொள்ளவில்லை. தான் திவானுக்கு விஷமிட நினைத்தது தனக்கே நேர்ந்ததென்று கூறுவதைக் கேட்டு மற்றவர் அதன் மூலகாரணத்தை அறிய எப்படியும் பிரயத்தனப்படுவர். ஆதலால், தான் அதற்கு இடங்கொடுப்பது சரியல்லவென்று நினைத்து, முத்துசாமி வேறே எவரையும் உதவிக்கு அழைக்காமல் தான் உயிர்க்கழுவில் நின்று துடித்த பரம வேதனையான சந்தர்ப்பத்தில், பலவித சிகிச்சைகள் செய்து தண்ணிர் கொடுத்து விசிறி, திவான் முதலியாரது மூர்ச்சையை இரண்டு நிமிஷ நேரத்தில் தெளிவித்தான். அவர் தமது கண்களைத் திறந்து பார்த்தார். முத்துசாமி தத்தளித்துத் தனது பிராணனைப் பிடித்துக்கொண்டு நின்றதையும், வேறே யாரும் இல்லாததையும் உணர்ந்து, 'அப்பா முத்துசாமி! நம்முடைய வைத்தியரை அவசரமாக அழைத்து வரச் சொல்லி ஆளை அனுப்பி இருக்கிறேன். அவர் வருவார். அவரிடமும் மற்றவரிடமும் நீ உண்மையான வரலாற்றைச் சொல்லப் போகிறாயா?" என்றார். முத்துசாமி, "நான் உண்மையைச்